அஜித்துக்கு தல என்று பெயர் வைத்ததே அவர் தான். தர்பார் இசை வெளியீட்டு விழாவில் போட்டுடைத்த முருகதாஸ்.

0
35087
murugadoss

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். தமிழ் சினிமாவில் தல என்றால் அது அஜித் மட்டும் தான். ஆனால், அஜித்துக்கு அந்த பட்டம் வர காரணம் கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘தீனா ‘ படம் தான் காரணம். முதன் முதலில் அஜித்தை தல என்று அழைத்தது நடிகர் மகாநதி ஷங்கர் தான்.அவர் தான் அந்த படத்தில் வரும் முதல் பாடலில் அஜித்தை தல என்று அழைத்திருப்பார். மேலும், தீனா படத்தில் இடம்பெற்ற ‘வத்திக்குச்சி பாதிக்காது டா’ என்ற பாடலின் ஆரம்பத்தில் மகாநதி ஷங்கர் தான் ‘தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது ‘ என்று கூறுவார்.

darbar

இந்த படத்திற்கு பின்னர் தான் அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் ‘தல ‘ அஜித்தாக மாறினார். இந்த நிலையில் அஜித்துக்கு தல என்ற பெயர் வர காரணமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார் படத்தை இயக்கி வரும் முருகதாஸ் கூறியுள்ளார். பேட்ட படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார் ‘படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக இணைந்துள்ளனர் ரஜினி மற்றும் முருகதாஸ் கூட்டணி.

இதையும் பாருங்க : ஜெயலலிதா தாயாக நடிப்பது இந்த தனுஷ் பட நாயகி தான். இவருக்கா இந்த நிலைமை.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஏ ஆர் முருகதாஸ் ‘நான் ரஜினினியின் சீனியர் ரசிகன். நிலாவை காட்டி குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவார்கள். ஆனால், ரஜினிகாந்த் சாரை இயக்கியது எனக்கு நிலாவில் இறங்கி சாப்பிட்டது போல இருக்கிறது என்று பேசிய முருகதாஸ், அஜித் குறித்து பேசும் போது நான் தீனா படத்தை இயக்கிகொண்டிருக்கும் போது, அஜித்துக்கு தல என்று பெயர் வைத்ததே ரஜினி தான்’ என்று கூறியதும் அரங்கமே அதிர்ந்து போனது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து மாஸ் ஹிட்டானது தீன இந்த படம் முதலில் நடிகர் விஜய்க்கு தான் வந்தது.

murugadoss deena க்கான பட முடிவு

-விளம்பரம்-

ஆனால், அப்போது பிரியமணவளே , பத்ரி போன்ற படங்களில் நடித்து வந்ததால் தீனா பட வாய்ப்பை தவரவிட்டார் விஜய். தீனா படத்தில் நடிகர் அஜித் ஒரு மாஸ் ஹீரோ என்பதால் அவரை தல என்று அந்த படத்தில் அழைத்தார். முதன் முதலில் அஜித்தை தல என்று அழைத்தது நடிகர் மகாநதி ஷங்கர் தான். அவர் தான் அந்த படத்தில் வரும் முதல் பாடலில் அஜித்தை தல என்று அழைத்திருப்பார். ஒருவேளை விஜய் இந்த படத்தில் நடித்திருந்த்தால் தற்போது ரசிகர்கள் அனைவரும் தளபதி என்று அழைப்பதற்கு பதிலாக தல என்று தான் அழைத்திருப்பார்கள்.

Advertisement