ஜெயிலர் ஆடியோ லான்ஞ்சில் ரஜினி சொன்ன குட்டி ஸ்டோரி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் 80 கால கட்டத்தில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
குரங்கு (கோமாளிகளுக்கும்) @ikamalhaasan …
— 🤘🤘Senthil 🤘🤘🤘 (@Senthilarumuga5) July 29, 2023
காக்கா( அணில்களுக்கும் )
அடித்த அடி …
மரண அடி
இது தலைவர் பஞ்ச்@rajinikanth #Jailer #JailerAudioLaunch #JailerFromAug10th pic.twitter.com/1E1AErBIcG
தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஜெயிலர் படம் குறித்து தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது. கடைசியாக ரஜினி நடித்த படம் “அண்ணாத்த”. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் வாரி இறைத்து இருக்கிறது. இதை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஜெயிலர் படம்:
இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ரஜினி அவர்கள் முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. பின் இந்த படத்தின் முதல் பாடலான “காவாலா” பாடல் கடந்த மாதம் வெளியாகி இருந்தது.
ஜெயிலர் படத்தின் பாடல்:
அதனை அடுத்து இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் அடுத்த கூறுகிறார்கள். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆடியோ வெளியீட்டு விழா:
இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் ஜெயிலர் பட குழுவினர் பலர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் செம மாஸ் ஆக பேசி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவர் ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றையும் சொல்லி இருக்கிறார். அது, காட்டில் பெரிய மிருகங்கள் எப்பவும் சின்ன மிருகங்களை தொல்லை செய்து கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, காகம் எப்பவும் கழுகை சீண்டிக்கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்பவும் அமைதியாக தான் இருக்கும். கழுகு பறக்கும் போது தான் அதை பார்த்து காக்கவும் உயரமா பறக்க நினைக்கும். ஆனால், காக்காவால் அது முடியாது.
விழாவில் ரஜினி சொன்னது:
கழுகு தன்னுடைய இறக்கையை கூட்டி ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்துக்கு பறந்து போய்விடும். உலகின் உன்னதமான மொழி மௌனம் தான். நான் காக்கா, கழுகு என்று சொன்னவுடனே இவரைத்தான் சொல்கிறேன் என்று சோசியல் மீடியாவில் சொல்வார்கள். இங்கு குறைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயுமில்லை, இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம் வேலையை பார்த்துக் கொண்டு நேரா போய்ட்டு இருக்கணும் என்று பயங்கரமாக பேசி இருந்தார். இப்படி ரஜினிகாந்த் பேசியதற்கு காரணம் ஜெயிலர் படத்தின் பாடல்கள் விஜய் தாக்கி பேசி இருந்தது என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கூறிந்தார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் ரஜினிகாந்தின் பேச்சு இருந்ததாக தற்போது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.