உச்ச நடிகராக இருந்த போதே ஆட்டோக்காரன் பாட்டுக்கு மேடையில் ஆடிய ரஜினி (இப்போ இருக்க டாப் ஹீரோஸ் ஆடுவாங்களா ? )

0
353
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டங்களில் தொடங்கி இன்று வரை இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதோடு இவருடைய நடிப்பு திறமைக்காக கடந்த ஆண்டு தேசிய விருதும் பெற்றிருந்தார். இதற்கு பலரும் பாராட்டி இருந்தார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது.

-விளம்பரம்-

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தை நெல்சன் குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான வீடியோ எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

நெல்சன்-ரஜினி கூட்டணியில் படம்:

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்பது போல் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து படம் பண்ணுகிறார்கள். நெல்சனின் டாக்டர் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்கு பிறகு நெல்சன், ரஜினியை வைத்து படம் பண்ணுகிறார். தற்போது நெல்சன் ஸ்டார் நாயகர்களின் ஃபேவரைட் இயக்குனராக திகழ்கிறார் என்று சொல்லலாம். தன்னுடைய நான்காவது படத்திலேயே சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது என்று கூறப்படுகிறது.

தலைவர் 169 படம் பற்றிய தகவல்:

நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘தலைவர் 169’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாட்ஷா படத்தில் வரும் ‘ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’ என்ற பாடலுக்கு ரஜினி நடமாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய பழைய புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் அதிகமாக வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

பாட்ஷா படம் பற்றிய தகவல்:

அந்த வகையில் தற்போது ரஜினி பாட்ஷா பட நடனம் வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாட்ஷா. இந்த படத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், சரண்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மாணிக்கம், பாஷா என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அப்போது கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் வசூலை பாட்ஷா படம் முறியடித்து சாதனை படைத்தது என்று சொல்லலாம். பலரும் இந்தப் படத்தை திருவிழா போன்று கொண்டாடி இருந்தார்கள்.

ரஜினியின் பாட்ஷா படம் நடன வீடியோ:

இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக சமீபத்தில் கூட சோசியல் மீடியாவில் #27yearsOfBaasha என்ற ஹேஷ் tag போட்டு பலரும் கொண்டாடி இருந்தார்கள். இந்நிலையில் தற்போது பாட்ஷா படத்திலிருந்து நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என்ற பாடலுக்கு விழா ஒன்றில் ரஜினி ஆட்டம் போட்டிருக்கிறார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் எப்போதும் தலைவருடைய ஸ்டைலிலும், மாசும் என்றும் குறையாது என்று கமெண்ட்களை போட்டு லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement