எனக்கு பின்னால் BJP இல்லை.. இவர்தான் இருக்கிறார் – செய்தியாளரிடம் ரஜினி அதிரடி பதில் !

0
1850

நடிகர் கமல் தான் அரசியலில் ஈடுபடபோவதாக கூறிய சில மாதங்களிலேயே கட்சியின் பெயர், கட்சியின் கொடி என்று எல்லாவற்றையும் அறிவித்துவிட்டார்.

rajinikanth

ஆனால் கமலுக்கு முன்னாள் தாம் அரசியலில் ஈடுபடப்போவதாக சொன்ன ரஜினி சற்று மந்தமாக தான் உள்ளார். ஆன்மிக அரசியல் என்ற புதிய நிலைப்பாட்டை கொண்டுள்ள ரஜினி பி. ஜே.பி.யுடன் கூட்டணி வைப்பார் என்று பலரும் பேசிவந்தனர்.ஆனால் சமீபத்தில் இமயலைக்கு சென்றுவந்த ரஜினி எனக்கு யாரிடமும் கூட்டனி கிடையாது, எனக்கு யாரும் துணையும் இல்லை. அரசியலை பொறுத்த வரை எனக்கு எப்போதும் ஆண்டவன் தான் துணை என்று அடிக்கடி சினிமாவில் பேசியது போல வசனத்தை பேசியுள்ளார் ரஜினி.

வரும் ஏப்ரல் மாதம் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த ரஜினி இமயமலைக்கு சென்று வந்த பின்னர் அடுத்த மாதம் கட்சியின் பெயர் வெளியிடப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ரஜினியின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.