அவருக்கு கொரோனா வந்தத 5 நாளா சொல்லவே இல்ல, நான் வேற அவர் கூட Closeஆ நடிச்சிட்டு இருந்தேன் – ரஜினி கொடுத்த ஷாக்.

0
637
rajini
- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியான முதல் நாளே கோடிக்கணக்கில் வசூலைக் குவித்தது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், அண்ணன்-தங்கை பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.

-விளம்பரம்-
Annaatthe tamil | Sun NXT

தங்க சங்கிலியை பரிசளித்த ரஜினி :

வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெற்றி பெற்றாலும் ரீதியாக இந்த படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது இருப்பினும் இந்த படம் வெளியாகி 50 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களை நடிகர் ரஜினி நேரில் அழைத்து தங்க சங்கிலியை பரிசாக வழங்கி இருந்தார். இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பின்போது நடந்த ஒரு அதிர்ச்சியான தகவலை ரஜினி மகள் துவங்கியிருக்கும் ‘Hoote’ செயலியில் ஆடியோவாக பேசியிருக்கிறார் ரஜினி.

- Advertisement -

கொரோனா தொற்றை மறைத்த Assistant :

அந்த ஆடியோவில் பேசியுள்ள அவர் ‘அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின்போது கீர்த்தி சுரேஷின் உதவியாளர் ஒருவருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் ஆனால், அதனை அவர் ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் யாருக்குமே சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், ஐந்து நாட்களுக்கு பிறகு அவருக்கு தொற்று இருப்பது படக்குழுவிற்கு தெரிய வந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.

ஏனென்றால் கீர்த்தி சுரேஷுடன் நான் இந்த படத்தில் மிக அருகில் நின்று நடித்துக் கொண்டிருந்தேன். இதனால் படக்குழு இருக்கும் பயம் ஏற்பட்டு விட்டது. இதனால் உடனடியாக படக்குழுவினர்கள் அனைவருக்குமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் என்னைப் பரிசோதித்து எனக்கு கொரோனா இல்லை என்பதை கூறினார்கள். இருந்தும் என்னுடைய நுரையீரல் போன்றவற்றை சோதித்து பார்க்க வேண்டும் என்று கூறினார்கள்.

-விளம்பரம்-

3 மாதங்கள் ஓய்வெடுத்த ரஜினி :

இதனால் மூன்று மாதங்கள் நான் சூட்டிங்கிற்கு செல்லவில்லை. பின்னர் மூன்று மாதங்கள் கழித்து படப்பிடிப்பிற்கு சென்றபோது கிளைமாக்ஸ் காட்சியை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். அப்போது தொடர்ந்து ஏழு நாட்கள் 700, 800 பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அனைவருக்குமேகொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சாட்டின் போது மட்டும்தான் மாஸ்க் இல்லாமல் இருக்கவேண்டும் சாட் முடிந்த உடனே அனைவரும் மாஸ்க்கை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது.

கிளைமாக்ஸ் படமாக்கப்பட்ட விதம் :

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுக்கும் போது நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் கீழே நடந்து கொண்டிருப்பார்கள். நான் மாடிக்கு மேல் நின்று கொண்டு இருப்பேன். இந்த காட்சியை சிறுத்தை சிவா கொரோனா பயத்தால் இப்படி வைக்கவில்லை இதை இரண்டு வருடங்களுக்கு முன்பே யோசித்து வைத்துவிட்டார். இது எல்லாம் ஆண்டவனின் செயல்தான் பின்னர் ஒரு வழியாக இந்த படத்தை முடித்துவிட்டு வெற்றிகரமாக தீபாவளி பண்டிகைக்கு இந்த படம் வெளியானது என்று ரஜினி பேசியுள்ளார்.

Advertisement