அன்புடன் தேவா – ரஜினி குணமடைய தளபதி பட ஸ்டைலில் மம்முட்டி போட்ட பதிவு. ரசிகர்கள் நெகிழ்ச்சி

0
6928
rajini

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் குணமடைய வேண்டும் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ட்வீட் போட்டுள்ளார். தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருந்த நிலையில் படப்பிடிப்புக் குழுவில் சிலருக்கும் கொரோனா ஏற்பட்டதால் ரஜினிகும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது . இபப்டி ஒரு நிலையில் நேற்று ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுபவிக்கப்பட்டார் .

மருத்துவமனையில் நேற்று (டிசம்பர் 25) அனுமதிக்கப்பட்ட பின்னர் அப்பல்லோ மருத்துவமனை சார்பாக அறிக்கை வெளியிட்டனர். அதில், இன்று காலை ரஜினிகாந்த் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் அவர் பங்கேற்றிருந்தார். அங்கு உடன் பணியாற்றிய சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதன் பிறகும் அவர் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். அவரது உடல்நிலையை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தது. கொரோனா நோய் அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை, என்ற போதிலும், ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் மிகுந்த மாறுபாடு காணப்படுகிறது.

இதையும் பாருங்க : இந்த வாரம் வெளியேறியது இவர் தானா ? வெளியான Verified தகவல்.

- Advertisement -

இது பற்றி தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டியது இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு உன்னிப்பாக கவனிக்கப்படும். அவரது ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவமனையில் வைத்திருந்து பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகள் மற்றும் உடல்நிலை சோர்வு ஆகியவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால் வேறு முக்கியமாக உடல்நிலை விஷயத்தில் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தது.

ரஜினிகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை அடுத்து பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆறுதல் கூறி வருகின்றனர். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ரஜினி விரைவில் குணமடைய வேண்டும் என்று ட்வீட் போட்டுள்ளார். அதில் ‘Get Well Soon Soorya , Anpudan Deva’ என்று தளபதி பட ஸ்டைலில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினி மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த ‘தளபதி’ திரைப்படம் இன்றளவும் நட்புக்கு ஒரு இலக்கனமான படமாக திகழ்ந்து வருகிறது.

-விளம்பரம்-

தளபதி படத்தில் ‘சூர்யா’ என்ற கதாபத்திரத்தில் ரஜினியும், தேவா என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டியும் நடித்திருந்தனர். இப்படி ஒரு நிலையில் மம்முட்டியின் இந்த பதிவை பார்த்ததும் பலரும் தளபதி படத்தின் நினைவிற்கு சென்று இந்த பதிவுக்கு கீழ் தளபதி பட புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ரஜினிகாந்த் நிலை குறித்து இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது.ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அதேநேரம் நேற்றைவிட இன்று நிலைமை முன்னேறி உள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் வேறு எந்த ஒரு கவலை தரக்கூடிய அம்சமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்று மீண்டும் அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவ பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை. ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது என்று இன்று மாலை முடிவு எடுக்கப்படும் அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி கிடையாது ம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement