பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் – பிரபல நடிகருடன் கிரிக்கெட் மைத்தனத்தில் ரஜினி.

0
725
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் கலக்கி கொண்டிருக்கிறார். இவருடைய திரைப்படங்கள் தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அதிக வரவேற்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இவருடைய பல படங்கள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் வெளியாகி வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது. மேலும், நடிகர் ரஜினிகாந்துக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் மக்கள் வகையில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

-விளம்பரம்-
Gallery

தற்போது ரஜினிகாந்த் அவர்கள் சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் அந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ரஜினியின் ஏதாவது ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளிவந்தால் போதும் அதை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

இதையும் பாருங்க : பீச்சில் பிகினி உடைகளில் போஸ் – சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் பட நடிகையா இது.

- Advertisement -

அந்த வகையில் ஹைதராபாத்தில் ரஜினி அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் சேர்ந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் ரஜினியும்,சிரஞ்சீவியும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். இதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறார்கள்.

ரஜினியும், சிரஞ்சீவியும் நெருங்கிய நல்ல நண்பர்கள். இவர்கள் இருவருமே சேர்ந்து படங்களில் நடித்துள்ளார்கள். ரஜினி படங்களில் சிரஞ்சீவியும், சிரஞ்சீவி படங்களில் ரஜினியும் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழில் ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தில் சிரஞ்சீவி ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement