கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஜெயிலர் படம்:
இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரிசென்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஜெலர் படத்தின் படப்பிடிப்பு :
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் முடிந்து தற்போது கர்நாடகா மாவட்டத்தில் உள்ள மங்களூருவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இங்கு ஜெலர் படத்தில் வரும் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது நடந்து வரும் படப்பிடிப்பு பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் அவர்களும் ரஜினிகாந்துடன் இணைந்து படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் தான் நேற்று மங்களூருவில் இருந்து பெங்களூருவிற்கு தன்னுடைய அண்ணனை பார்பதற்காக வந்திருந்தார் ரஜினிகாந்த்.
அண்ணணின் பிறந்தநாள் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இங்கு வந்த நோக்கம் தன்னுடைய அண்ணனின் 80வது ஆண்டு பிறந்தநாளை சிறப்பிக்க தான். அங்கு தன்னுடைய அண்ணனுடன் ரஜினிகாந்த் இணைந்து பெங்களூருவில் உள்ள 112அடி உயர ஆதியோகி மையத்தில் வழிபாடு செய்து பூஜையிலும் கலந்து கொண்டார். ரஜினியும் அவரது அன்னான் சாத்தியநாராயணனும் பூஜையில் இருக்கும் புகைப்படங்கள் த்ற்போது சோசியல் மீடியாவில் உலா வருகிறது.
தியானம் செய்த ரஜினி :
மேலும் இதற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பெங்களூருவில் உள்ள ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடித்தி வரும் மகா சிவரத்திரி விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த தன்னுடைய மனைவி லாதாவுடன் பங்கேற்றார். இந்த விழாவில் ரஜினிகாந்தும் அவரது மனைவி லதாவும் தியானம் செய்யும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.