ரஜினியின் ’பாபா’ முத்திரை எங்களுடையது ! குழப்பத்தில் நடிகர் ரஜினிகாந்த் !

0
1239
rajini

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த பின்னர் அரசியல் வட்டாரத்தில் ஒரு பெருங்குழப்பமே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினி பயன்படுத்திவரும் பாபா முத்திரை எங்களுடையதுஎன மும்பை சேர்ந்த தனியார் நிறுவனம் பகீர் கிளப்பியுள்ளது.

ரஜினி தனது பாபா முத்திரையை பலகாலமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. பாபா படத்தில் இருந்தே இந்த முத்திரை அவர பயன்பாட்டில் உள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.
babaஇந்த முத்திரையை ரஜினி தனது வெப்சைட் மற்றும் அனைத்து மன்றங்களுக்கும் விரிவுபடுத்தி பயன்படுத்தி வருகிறார். இதனை அறிந்த மும்பையை சேர்ந்த Voxweb என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தங்கள் முத்திரை எனக் கூறியுள்ளது. மேலும், இரண்டு வருடத்திற்கு முன்னரே இதற்காக நாங்கள் காப்புரிமை பெற்று பயன்படுத்தி வருகிறோம் எனவும் கூறியுள்ளது. இது குறித்து அந்நிறுவன தலைவர் ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் இன்னும் ரஜினியிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை எனத் தெரிகிறது. இது ரஜினி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.