நான் அரசியலுக்கு வருவது உறுதி.! ஆனால், இத்தனை படத்தில் நடித்த பிறகு தான்.!

0
541

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி,கமல் மட்டும் விதிவிலக்கல்ல.கமலுக்கு முன்பாகவே ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், அம்புலி மாமா கதை போல ரஜினி இன்னமும் முழுமையாக அரசியலுக்கு வந்த பாடில்லை.

கமலுக்கு முன்னர் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த ரஜினியின் கட்சி பணிகள் சற்று மந்தமாக தான் இருந்து வருகிறது. அதே போல ரஜினியின் நெருங்கிய வாட்டாரங்களும் ரஜினி விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்க :
ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் இல்லை..!ரோட்டு கடைகாரர் கூட கலாய்க்கிறார்..! 

- Advertisement -

ஆனால், ரஜினி அரசியலுக்கு வரவில்லை அவரது படங்கள் தான் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. தற்போது ரஜினி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி 166 படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. 

மேலும், முருகதாஸ் படத்திற்கு பின்னர் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ்ஜுடன் ஒரு படத்திலும், பா ரஞ்சித்துடன் ஒரு படத்திலும் ரஜினி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுரேஷ்கிருஷ்ணா,ராஜமௌலி. கே எஸ் ரவிக்குமார் என அடுத்தடுத்து 5 பேரின் படங்களில் நடிப்பதற்கு ரஜினி முடிவு செய்துள்ளார் என்றும், அதன்பிறகுதான், அவர் அரசியலுக்கு வருவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Advertisement