ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் இல்லை..!ரோட்டு கடைகாரர் கூட கலாய்க்கிறார்..!

0
374
rajinikanth

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி கமல் மட்டும் விதிவிலக்கல்ல.

கமலுக்கு முன்பாகவே ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், அம்புலி மாமா கதை போல ரஜினி இன்னமும் முழுமையாக அரசியலுக்கு வந்தபாடில்லை.

ரஜினிக்கு பின்னர் அரசியல் களம் கண்ட கமல் கட்சி தொடங்கி வரும் தேர்தலில் போட்டியிடவே போகிறார். ஆனால், இன்னமும் அவர் அரசியல் கட்சி துவங்கவில்லை. அதற்கு முன்பாக டிவி சேனல் துவங்கும் வேலையை துவங்கிவிட்டார்.

ரஜினி நிச்சயம் முழு அரசியலில் ஈடுபடுவார் என்று அவரது ரசிகர்கள் நம்பி வரும் நிலையில், சென்னையில் உள்ள ஒரு ரோட்டு கடை ஒன்றில் ‘ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது என்று போர்டு வைத்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர ரஜினி கடைசி வரைக்கும் அரசியலுக்கு வர மாட்டார் என்று கிண்டலடித்து வருகின்றனர்.