சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் இவருடைய ஸ்டைலுக்கும் நடிப்புக்கும் எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். அதனாலேயே தான் இன்று வரை சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ரஜினி நயன்தாரா அவர்கள் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து உள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இது ரஜினிகாந்தின் 167 வது படமாகும். சென்சாரில் யு/ ஏ சான்றிதழ் இந்த படத்திற்கு கிடைத்து உள்ளது. மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிகளை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேரன்கள் மற்றும் ரஜினி மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து கண்டு மகிழ்ந்தனர். ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு வெளியிட அரசு அனுமதி அளித்தது.
இதையும் பாருங்க : வித்யாசமாக ‘மிஸ் விக்கி’ என்று காட்டிய நயன். புகைப்படத்தின் மூலம் வதந்திக்கு முற்றி புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்.
இதனையடுத்து இன்று அதிகாலை 4 மணிக்கு இந்த திரைப்படம் வெளியானது. சென்னையில் பல இடங்களில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோஹிணி, காசி, பரங்கிமலை ஜோதி உட்பட பல இடங்களில் இந்தப் படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது. மேலும், படம் வெளியாகும் திரையரங்குகளில் முன் ரஜினி ரசிகர்கள் அனைவரும் வெடி வெடித்து, கேக் வெட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் திரையரங்குக்கு முன்னாடி ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் என அனைத்து இசையோடு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று ரசிகர்கள் இந்தப் படத்தின் வெளியீட்டை மிக மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர்.
சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கத்தில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் பார்ப்பதற்கு லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் அனைவரும் வந்துள்ளனர். மேலும், படத்தின் சிறப்பு காட்சியை கண்டு மகிழ்ந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரோகிணி திரையரங்கம் தன டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தர்பார் படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள் என தகவல் வெளியானது.
மேலும், நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் பல உள்ளது. இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இரு வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.