ஸ்டுடியோவை விட்டு வெளிய போடா. ஆயிரம் ரூபாய்க்காக ரஜினியை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் இவர் தானாம்.

0
3900
rajini
- Advertisement -

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் சுமாராக ஓடியது.இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தர்பார் படம் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஒருவரால் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ரஜினி பேசி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் அவர்கள் பேசியது, ரஜினிகாந்த் என்ற பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு வைக்க வேண்டும் என்று பாலசந்தர் யோசித்து எனக்கு வைத்தார். இந்த அளவிற்கு நான் இருப்பதற்கு காரணம் அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான்.

இதையும் பாருங்க : என்னது சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டாரா ? எச். ராஜாவின் சர்ச்சை பேச்சு. வீடியோ இதோ.

- Advertisement -

அவர் நம்பிக்கை வீண் போக வில்லை. சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்தில் தயாரிப்பாளர் ஒருவர் என்னை அவமானப்பட்டுத்தி படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்காமல் என்னை திட்டி துரத்தி வெளியேற்றினார். அந்த வெறி கோடம்பாக்கம் சாலையில் வெளிநாட்டு காரில் கால் மேல் கால் போட்டு போக வேண்டும் என்று எனக்கு ஆசை ஏற்பட்டது. அதற்கு பிறகு நான் இத்தாலி கார் ஒன்றை வாங்கினேன். அதனை வெளிநாட்டு நபரை வைத்து நேராக கோடம்பாக்கம் சென்றேன். எந்த தயாரிப்பாளரால் நான் அவமதிக்கப்பட்டேனோ அந்த இடத்தில் எனது காரை நிறுத்தி சிகரெட்டை பற்ற வைத்தேன். நம் வாழ்க்கையில் வெற்றி பெற நேரம், காலம், சந்தர்ப்பம், சூழ்நிலை எல்லாம் ரொம்ப முக்கியம்.

வீடியோவில் 1 : 36 நிமிடத்தில் பார்க்கவும்

அதற்காக நாம் காத்திருக்கனும், உழைக்க வேண்டும் என்று கூறினார். ரஜினிகாந்த் அவமதிப்பதை தொடர்ந்து அவரை அவமதித்தார் எந்த தயாரிப்பாளர்? என்று சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் அந்த தயாரிப்பாளர் யார் என்பதை பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லக்ஷ்மன் கூறியுள்ளார. அந்த தயாரிப்பாளரின் பெயர் சிவசுப்பிரமணியம். அம்மையார் ஜெயலலிதா நடித்த கணவன் மனைவி உள்ளிட்ட பல படங்களை அவர் தயாரித்துள்ளதாகவும், அவர்தான் ரஜினியை அசிங்கப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 35 ஆண்டு கால வினாவிற்கு கடைசியில் விடை கிடைத்துவிட்டது

-விளம்பரம்-
Advertisement