முதலமைச்சரை நேரில் சந்தித்து கொரோனா நிதி அளித்த ரஜினிகாந்த் – நிதி அளித்த பின் மக்களுக்கு அவர் வைத்த வேண்டுகோள்.

0
836
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

-விளம்பரம்-

கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது. உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். உலக தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குங்கள். மக்கள் அளிக்கும் நிதி கொரோனா தடுப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். திடீர் அவசர செலவினங்களுக்காக தாராளமாக நிதியுதவி வழங்குங்கள். புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுங்கள். 

இதையும் பாருங்க : லாக்டவுனில் திருமணத்தை முடித்த சமையல் மந்திரம் கிரிஜா – இதோ திருமண புகைப்படம்.

- Advertisement -

நிதியுதவி செய்பவர்களின் விவரங்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா முதலமைச்சரை சந்தித்து 1 கோடி ரூபாய் நிதி வழங்கி இருந்தார். அவரை தொடர்ந்து சிவகார்த்திகேயன், அஜித் என்று பலர் கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி வழங்கி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, நிதியாக ரூ.50 லட்சம் வழங்கியதாகத் தெரிவித்த ரஜினிகாந்த், ”கொரோனா என்னும் கொடிய உயிர்க்கொல்லி நோயை ஒழிக்க அரசாங்கம் கொண்டுவந்த கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். அப்போதுதான் கொரோனா எனும் நோயைக் கட்டுப்படுத்த முடியும். இது பொதுமக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்” எனத் தெரிவித்தார்.

-விளம்பரம்-
Advertisement