அஜித், விஜயுடன் சேர்ந்து நடித்த நடிகையின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் அஜித்- விஜய். இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போதும் இவர்கள் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களுடன் இணைந்து நடித்த நடிகை குறித்த விவரத்தை தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
அதாவது, 80, 90 காலகட்டத்தில் பல நடிகைகள் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்திருக்கிறார்கள். தற்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று ரசிகர்களும் ஆவலுடன் தேடி வருகின்றனர். மேலும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த பல நடிகைகள் தற்போது தங்களுடைய குடும்பங்களை கவனித்து வருகிறார்கள். ஆனால், சிலர் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை.
அந்த வகையில் விஜய்- அஜித்துடன் நடித்த நடிகை சுவாதியின் குடும்ப புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தேவா. இந்த படத்தின் மூலம் தான் நடிகை சுவாதி தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதோடு இவர் முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சுவாதி திரைப்பயணம்:
அதற்கு பின்பு அஜித் நடிப்பில் வெளிவந்த வான்மதி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சுவாதி நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற பிறமொழி படங்களிலும் கதாநாயகியாக இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் சுவாதி சினிமாவில் இருந்து விலகி விட்டார்.
சுவாதி திருமணம்:
இதனால் இவர் 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான பிறகு நீண்ட காலங்கள் இவர் சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். அதோடு இவர் குடும்பத்திலேயே பிஸியாக இருந்தார். மேலும், நீண்ட இடைவெளிக்கு இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் என்று கொடுத்திருந்தார். அந்த வகையில் இவர் தமிழில் கடைசியாக யோகி என்ற படத்தில் நடித்திருந்தார்.
சுவாதியின் குடும்ப புகைப்படம்:
அதற்குப் பிறகு இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. பின் இவர் என்ன ஆனார் என்றே கேள்விக்குறியாகவே இருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகை சுவாதியின் குடும்பப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.