ரஜினி என் காலை பிடிக்க மாட்டேனு சொன்னார் – ஆனால், அதன் காரணம் படம் வெளியான பின்னர் தான் தெரிந்தது – ஷோபனா பேட்டி.

0
2471
shobana
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சோபனா. இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். சோபனா அவர்கள் திரைப்பட நடிகை என்பதை விட புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர் ஆவார். இவர் தன்னுடைய பரதநாட்டியக் கலைக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

-விளம்பரம்-
Actress Shobana talks about her experience on working with Rajini

இவர் 90ஸ் காலகட்டத்தின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் என்று பல்வேறு டாப் நடிகர்களுடனும் நடித்து உள்ளார். அதிலும் இவர் ரஜினியுடன் இணைந்து தளபதி, சிவா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமோ சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்தது. இந்த நிலையில் நடிகை ஷோபனா, ரஜினியுடன் சிவா படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

- Advertisement -

1989 ஆம் ஆண்டு வெளியான ‘சிவா’ திரைப்படம் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் ஒரு காட்சியில் ரஜினியை பார்க்க ஷோபனா நடு இரவில் அவரது வீட்டில் ஓட்டை பிரித்து உள்ளே செல்வார். அந்த காட்சியில் ரஜினி ஷோபனாவின் காலை அமுக்குவது போல ஒரு காட்சி வரும். ஆனால், இந்த காட்சியில் நடிக்க ரஜினி முதலில் தயங்கினராம். மேலும், இயக்குனரிடமும் இந்த காட்சி வேண்டாம் என்று சொன்னராம்.

ஆனால், எப்படியோ சமாதானம் செய்து அந்த காட்சியில் நடித்தாராம் ரஜினி. ரஜினி அந்த காட்சியில் நடிக்க தயங்கிய காரணம் படம் வெளியான பின்னர் தான் தனக்கு தெரிந்தது என்று கூறியுள்ள ஷோபனா. ரஜினி என் காலை பிடித்ததை பார்த்துவிட்டு தனக்கு பலர் மிரட்டி கடிதம் அனுப்பினார்கள். அப்போது தான் நான் புரிந்து கொண்டேன் அவர் ஏன் அந்த காட்சியில் நடிக்க தயங்கினார் என்று புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார் ஷோபனா.

-விளம்பரம்-
Advertisement