‘தலைவரின் தெய்வ வாக்கு’ – இறுதி போட்டிக்கு நுழைந்த SRH அணி – ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய வீடியோ தற்போது வைரல்

0
406
- Advertisement -

சன்ரைசரஸ் அணியின் உரிமையாளர் காவியா மாறனுக்கு ரஜினிகாந்த் சொன்ன அறிவுரை தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் சில மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் சிஎஸ்கே அணி தோற்று வெளியே இருக்கிறது.

-விளம்பரம்-

பின் சமீபத்தில் நடந்து முடிந்த பிளே ஆப் சுற்றில் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ராஜஸ்தான் ராயல் அணிக்கு இடையே மோதல் நடைபெற்றது. சென்னை ஏ எம் சிதம்பரம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. முதலில் டாசை ராஜஸ்தான் அணி தான் வென்றது. ஆனால், அவர்கள் பந்து வீசினார்கள். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்க் செய்தது. இறுதியில் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 175 ரன் எடுத்திருந்தது.

- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அதற்குப்பின் ராஜஸ்தான் அணி விளையாடி 20 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து தோற்றது. இதனால் ராஜஸ்தான் அணி இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது. மேலும், மூன்றாவது முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதி போட்டிக்குள் சென்று இருக்கிறது. இதனால் ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் பலரும் இதை கொண்டாடி வருகின்றார்கள். அதோடு இந்த அணியின் உரிமையாளர் காவியா மாறன் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ரஜினி வீடியோ:

இந்நிலையில் பட விழா ஒன்றில் காவியா மாறன் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியிருக்கும் வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அடுத்த முறை நல்ல வீரர்களை சேர்க்க வேண்டும். ஐபிஎல் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. சன்ரைசர்ஸ் விளையாடும் போது காவியா மாறனின் எக்ஸ்பிரஷன் எல்லாம் பார்க்கும்போது நமக்கு டென்ஷன் ஆகிறது.

-விளம்பரம்-

காவ்யா மாறன் குறித்த தகவல்:

அப்படியே நமக்கு பிபி ஏறி விடுகிறது என்று கூறி இருந்தார். இப்படி அவர் பேசியிருக்கும் வீடியோவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வைராக்கி வருகிறார்கள். அதோடு சென்னையில் தான் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இறுதி ஆட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சன்ரைசர்ஸ் மோத இருக்கிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ரஜினி திரைப்பயணம்:

கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்திருந்தது. இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்த லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய வேலைகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதை அடுத்து ரஜினி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகி இருக்கிறது.

Advertisement