மாஸ்டர் நாயகிக்கு ரஜினி, பேட்ட ஷூட்டிங்கில் சொல்லிக் கொடுத்த விஷயம்

0
912
malavika
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் மாளவிகா மோகனும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன். இவர் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படத்தினை தொடர்ந்து தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மாளவிகா மோகன் பேட்ட படத்தின் ஷூட்டிங்கில் ரஜினியுடன் நடந்த உரையாடல் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Unseen Click From #Petta

A post shared by Behind Talkies (@behindtalkies) on

அதில் அவர் கூறியது, எனக்கு பேட்ட பட வாய்ப்பு வந்தபோது பலரும் அதில் நடிக்க வேண்டாம் எனக் கூறினார்கள். அது மிகச் சிறிய ரோல் என்ற காரணம். ஆனால், அப்போது நான் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என கூறி அந்த வாய்ப்பை நிராகரித்து இருந்தால் ஒரு அழகான படத்தை நான் மிஸ் செய்திருப்பேன். படத்தில் எனக்கு மிகச் சிறிய ரோல் தான். ஆனால் நடிப்புத் திறமையை காட்ட அதிகம் ஸ்கோப் இருந்தது. மேலும், உங்களை நிரூபிக்க ஒரு சீன் போதாதா.

இதையும் பாருங்க : ஆம்பளைங்களை பார்த்து கூச்சம் இல்லாம கேள்வி கேக்குற நீ ரஜினி பத்தி பேசுற – பார்வதியை கழுவி ஊற்றும் ரஜினி ரசிகர்கள்.

- Advertisement -

அதோடு எனக்கு ரஜினி சாருடன் நடிக்க அதிக விரும்பும். இன்னொரு முறை அவருடன் நடிக்க வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என்று தெரியவில்லை. அதனால் நான் அந்த படத்தில் நடித்தேன். பேட்ட படம் தான் எனக்கு மாஸ்டர் பட வாய்ப்பு கிடைக்க காரணம். பேட்ட படம் என் திரை பயணத்தில் முக்கியமான ஒன்று. ஷுட்டிங் ஸ்பாட்டில் ரஜினியுடன் நடந்த உரையாடல்களை என்னால் மறக்க முடியாத ஒன்று. ரஜினி அவர்கள் எனக்கு கிரியா யோகா சொல்லிக் கொடுத்தார். ஆன்மீகம் மற்றும் தியானம் உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி ரஜினிகாந்த் சார் என்னிடம் பேசினார்.

இந்த உரையாடலை நான் என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன். மேலும், படத்தில் என்னுடைய அப்பா கதாப்பாத்திரம் இறந்த பிறகு நான் அழுவது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அதில் எனக்கு மிக நீண்ட வசனம் கொடுக்கப்பட்டது. அதில் நான் நடித்து முடித்த பிறகு ரஜினி சார் எனக்காக கை தட்டினார். இதை யார் செய்வார்கள்? ரஜினி சார் எனக்காக கைத்தட்டியதை பெருமையாக நினைக்கிறேன் என மாளவிகா மோகனன் கூறி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement