40 ஆண்டுகாள திரைவாழ்க்கையில், யாரும் என்னிடம் திருநங்கை கதைய சொல்லல. ரஜினி ஓபன் பேட்டி

0
16153
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகை தன்னுடைய நடிப்பாலும்,ஸ்டைலாலும் திரும்பி பார்க்க வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசை அமைத்து உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். மேலும், இந்த படத்தை பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் தர்பார் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் தர்பார் படத்தின் ட்ரைலரை பார்த்து ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தர்பார் படத்திற்கான பிரஸ் மீட் சமீபத்தில் மும்பையில் நடை பெற்றது. இந்த பிரஸ் மீட்டில் அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்போது ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உங்களுக்கு எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் என்று கேட்டு உள்ளார். அதற்கு ரஜினிகாந்த் அவர்கள் எனக்கு ‘திருநங்கை’ கதாபாத்திரத்தில் தான் நடிக்க விருப்பம் என்று கூறி உள்ளார். உடனே மற்றுவோருவர் இதுவரை உங்கள் 40 வருட சினிமா வாழ்கை அனுபவத்தில் யாராவது உங்களிடம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க கதை சொல்லி இருக்கிறார்களா?? என்று கேட்டார்.

இதையும் பாருங்க : தமிழ் படத்தால் நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். சர்ச்சையை ஏற்படுத்திய ஜீவா பட நடிகை.

- Advertisement -

அதற்கு ரஜினிகாந்த் அவர்களும் யாரும் அந்த மாதிரி கதை சொல்லவில்லை. ஒரு படத்தில் மட்டும் ஒரு காட்சியில் மட்டும் திருநங்கை வேடம் போட்டு உள்ளேன் என்று பதில் அளித்து உள்ளார். மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி இயக்குனர்களால் தான் அந்த மாதிரி கதையை எடுக்க முடியும் என்றும் கூறி உள்ளார். பின் நாடு முழுவதும் கொந்தளிப்பில் உள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று மீடியா கேட்டு உள்ளது. அதற்கு உடனே ரஜினிகாந்த் அவர்கள் அது பேசுவதற்கான இடம் இது கிடையாது என்று கூறி உள்ளார்.

மேலும், விஜய் சேதுபதி அவர்கள் “சூப்பர் டீலக்ஸ்” என்ற படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்து இருந்தார் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அவர்கள் காஞ்சனா படத்தின் ரீமேக்கில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர்கள் இருவருமே ரஜினியுடன் படத்தில் இணைந்து நடித்தவர்கள் தான். இவர்கள் இருவருடன் இணைந்து நடித்து பழகியிருப்பதன் மூலமாக தான் தலைவர் ரஜினி காந்த் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருக்கும் என்று கூறிவருகிறாரோ?? என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் திருநங்கை கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் வைத்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் படம் இயக்குவாரா?? என்றும் ஒரு பக்கம் பேசுகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement