திருவண்ணாமலையில் அண்ணாமலையார் தீப ஜோதியை காண மலையேறி சென்று உள்ளார் நடிகை சாய் தன்ஷிகா. தற்போது அவர் தீபத்தை காண சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் புகழ்பெற்ற கோவில்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலும் ஒன்று. திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றுவது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் சரியாக மாலை 5.55 மணிக்கு தீபம் ஏற்றுவார்கள். திருவண்ணாமலை கார்த்திகை தீபம் வருடம் வருடம் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை தீபம் சூரிய உதயத்தை சார்ந்தே ஏற்றுவார்கள் என்பது ஒரு சம்பிரதாயம். இந்த தீபம் தொடர்ந்து 10 நாட்கள் எரியும். உலகத்தில் உள்ள பல இடங்களில் இருந்து திருவண்ணாமலை கார்த்திகை மாதம் தீபத்தை காண வருவார்கள். மேலும், திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஒரு பண்டிகை போன்று கொண்டாடி வருகிறார்கள் பக்தர்கள்.
இந்த காலத்தில் தான் பல லட்சக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் திருவண்ணாமலைக்கு வருவார்கள். இந்த வருடம் திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. திருவண்ணாமலை தீபம் அன்று அனைவரும் கிரிவலம் செல்வார்கள். இந்த திருவண்ணாமலை தீபம் விழாவில் சினிமா பிரபலங்களும், பல தொழில் அதிபர்கள், வெளிநாட்டு பக்தர்களும் ஏழை எளிய மக்கள் என அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் நடிகை தன்சிகா அவர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் தீபத்தை பார்க்க வந்து உள்ளார். மேலும், இவர் அண்ணாமலையார் தீப ஜோதியை பார்க்க 3 மணி நேரம் மலை ஏறி சென்று உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் பாருங்க : வர்மா படத்தால் ஏற்பட்ட அவமானம். ஆதித்ய வர்மா படத்திற்கு போட்டியாக வர்மா படத்தை வெளியிடும் பாலா.
நடிகை தன்ஷிகா அவர்கள் தஞ்சையில் பிறந்தவர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலிங் மீது அதிக ஆர்வம் கொண்டு உள்ளதால் மாடலிங் வேலைகளை செய்து வந்தார். இதற்குப் பின் தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், 2006 ஆம் ஆண்டு வெளியான திருடி என்ற படத்தின் மூலம் தான் நடிகை தன்ஷிகா தமிழ் திரையுலகில் நுழைந்தார்.நடிகை தன்ஷிகா அவர்கள் எஸ்.பி. ஜனார்தனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளி வந்த “பேராண்மை” படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்த படம் மாபெரும் வெற்றியை அடைந்தது.
அதற்கு பிறகு நடிகை தன்ஷிகா அவர்கள் மாஞ்சா வேலு ,நில் கவனி செல், அரவான், பரதேசி, யாயா, திரந்திடு சீசே, கபாலி, எங்க அம்மா ராணி, உரு, சோலோ, விழித்திரு, காத்தாடி, கல்லக்கூத்து போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். அதிலும் 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்து உள்ளார். இதற்கு பிறகு இவருக்கு சினிமா உலகில் பல படங்கள் வாய்ப்பு வந்தது. சமீபத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான ‘இருட்டு’ படத்திலும் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தன்ஷிகா.