ஒருத்தர் Rolls Royce கார் வச்சிட்டு Simplicityனு சொல்லிட்டு இருக்கார் – Simplicity குறித்து ரஜினி சொன்ன வீடியோவை பகிரும் நெட்டிசன்கள்.

0
487
Vijay
- Advertisement -

சமீபத்தில் சன் டிவியில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய் பீஸ்ட் ஷூட்டிங்கின் போது 100 ரூபாய் பிரியாணி சாப்பிட்ட விஷயத்தை வைத்து அவரை சிம்ப்ளிசிட்டியாக இருக்கிறார் என்று நெல்சன் புகழ்ந்து இருந்தார். ஏற்கனவே விஜய் 100 ரூபாய் பிரியாணி சாப்பிட்டு மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார் என்று நெல்சன் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இதனால் விஜய்யை பலரும் கேலி செய்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சன் டிவி பேட்டியில் இதுகுறித்து மீண்டும் நெல்சன் விஜய்யிடம் பேச தற்போது மீண்டும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறார் விஜய்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-19-1024x490.jpg

இப்படி ஒரு நிலையில் எளிமைக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை எந்திரன் 2 படத்தின் போது ரஜினி பேசி இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தொகுப்பாளியாக இருக்கும் அர்ச்சனா, ரஜினியிடம் ‘எப்படி சார் இவ்ளோ சிம்பிளா இருக்கீங்க’ என்று கேள்வியை கேட்கிறார். அதற்கு ரஜினி ‘இல்ல, சிம்ப்ளிஸிட்டினு சொன்ன எனக்கு தெரியமாட்டிங்குது’

இதையும் பாருங்க : ராமநவமி கொண்டாட்டம்,மசூதியில் காவிக்கொடி ஏற்றம் – வீடியோவை ஷேர் செய்து BJP குஷ்பூ போட்ட பதிவு.

- Advertisement -

Simplicity குறித்து ரஜினி :

நான் போறது BMW கார்ல இருக்கறது போயஸ் கார்டன் வீட்ல, போறது எல்லாம் 5 ஸ்டார் 7 ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட போறது. ட்ரெஸ் பண்றதுல மட்டும் சிம்ப்ளிசிட்டியா என்று பேசி இருக்கிறார் ரஜினி. தற்போது இந்த வீடியோவை பகிர்ந்து வரும் ரசிகர்கள், விஜய்யின் சிம்ப்ளிஸிட்டியை கேலி செய்து வருகின்றனர். பொதுவாக விஜய் படங்கள் வந்தாலே அஜித் ரசிகர்கள் தான் அதை Troll செய்வார்கள். ஆனால், இந்த முறை அஜித் ரசிகர்களை விட ரஜினி ரசிகர்கள் தான் விஜய் படத்தை கேலி செய்து வருகின்றனர்.

விஜய் Fans Vs ரஜினி Fans :

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியான போது. இந்த நிகழ்ச்சியில் விஜய் இந்த வயதிலும் இளமையாக இருக்கிறார் என்று பலர் பாராட்டினாலும, ஒரு சிலரோ விஜய் இந்த லுக்கில் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறார் என்று கூறிவந்தனர். அதிலும் பல விஜய் ரசிகர்களே விஜய் இந்த லுக்கில் ஒரு மாதிரி தெரிகிறார். அவரது முகத்தை விட அவரது முடி பெரிதாக தெரிவிதால் இந்த லுக் ஏதோ எடிட் செய்யப்பட்டது போலவும், கிரீன் மேட் பயன்படுத்தி Vfx செய்தது போல இருக்கிறது என்று விஜய் ரசிகர்களே கூறி வந்தனர்.

-விளம்பரம்-

கேலிக்கு உள்ளான விஜய்யின் தோற்றம் :

விஜய்யின் முதல் படம் துவங்கி தற்போது வரை அவரது உருவத்தை பற்றிய பல விமர்சங்கள் எழுந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும் சமீப காலமாக நடிகர் விஜய் பல்வேறு படங்களில் ஒரிஜினல் முடி வைத்து நடிக்கவில்லை என்ற பல கேலி கிண்டல் இருக்கத்தான் செய்து வருகிறது இப்படி ஒரு நிலையில் விஜய்யின் தோற்றத்தை ரஜினி ரசிகர்கள் சிலரும் கேலி செய்ய துவங்கி இருந்தனர்.

This image has an empty alt attribute; its file name is 1-128.jpg

ஏற்கனவே எழுந்த Wig பிரச்சனை :

அதிலும் ஒரு ரசிகர், ரஜினி அளித்த பேட்டியின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பேட்டியில் ரஜினி wig வைப்பது இல்லை. திரையில் மட்டுமே Makeup சில பேர் இருக்கானுங்களே என்று விஜய்யை மறைமுகமாக கேலி செய்து இருந்தனர். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன. ரஜினி, அண்ணாமலை பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய வீடியோக்களை பகிர்ந்து. அதில் ரஜினி விக் வைத்து இருந்தார் என்று கேலி செய்து இருந்தார்கள் என்பது கூறிப்பிடதக்கது.

Advertisement