தமிழ் சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவான் ஆகவும், உச்ச நட்சத்திரமாகவும், அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் ஆகவும் இருக்கும் நம்ம தலைவர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று. இவருடைய பிறந்த நாளை இந்தியாவே கொண்டாடி வருகிறது. ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய நடிப்பாலும், ஸ்டைலாலும், பேச்சாலும் மாஸ் காட்டி லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடலுக்கு ஏற்ப உண்மையாகவே இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரை ரசிக்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள். ரஜினிகாந்த் அவர்கள் 70 ஆவது பிறந்த நாளை அமர்க்களமாக தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார்.
மேலும், சமூக வலைத் தளங்கள் அனைத்திலும் ரசிகர்களும், மக்களும், பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை குவித்துக் கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இன்றைய டிரெண்டிங் நியூஸ் நம்ம தலைவர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் தான். இந்த நிலையில் ரஜினிகாந்த் பிறந்த நாள் இன்று அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா அவர்கள் ஒரு புதிய வெப்சைட் ஒன்றை ஆரம்பித்து உள்ளார். அந்தப் புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். என்னுடைய அப்பா பிறந்த நாள் அன்று என்னுடைய வெப்சைட்டை வெளியிடுவதில் எனக்கு மிகவும் ஆனந்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்றும் கூறி உள்ளார்.
இதையும் பாருங்க : ரஜினியின் பெற்றோர்களை பார்த்துள்ளீர்களா. இந்தாங்க சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் பரிசு.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படத்தை பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ‘தலைவர் 168’ படத்தின் பூஜைகள் நடை பெற்றது.
இதனால் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷியில் ஆரவாரம் செய்து வருகிறார்கள். சிவா இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள் என தகவல் வெளியானது. நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார். மேலும்,கூடிய விரைவில் படத்தின் தகவல் வெளியாகும் என்று தெரிய வந்து உள்ளது.