ரஜினியின் பெற்றோர்களை பார்த்துள்ளீர்களா. இந்தாங்க சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் பரிசு.

0
9159
Rajinikanth
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12 ) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதனால் பல்வேறு திரை துறையினரும் ரசிங்கர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சினிமா திரையுலகில் ரஜினி ஆற்றிய சாதனைகளும், படைப்புகளும் எண்ணிலடங்காதவை. ரஜினிகாந்த் அவர்கள் சினிமா துறையில் மட்டும் இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய புது விஷயங்களை செய்துள்ளார். ரஜினிகாந்த் ஒரு ரியல் ஹீரோ என்பது எல்லோருக்குமே தெரியும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பிரபல நடிகை லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

-விளம்பரம்-
Image result for super star rajini father

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்று இரண்டு மகளும் பிறந்தார்கள். அதே போல கர்நாடகாவில் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜீராவ் காயகவாட் இன்று இந்தியாவை திரும்பி பார்க்கவைக்கும் ஒரு மாபெரும் நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கமலின் உங்கள் நான் விழாவில் பேசிய போது கூட, தான் மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து தான் வந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார் ரஜினி. ரஜினியை பற்றி ரசிகர்களுக்கு பல விஷயம் தெரிந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தந்தையை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இதையும் பாருங்க : மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடித்த பீம் பாய் என்னவானர் தெரியுமா ?

இந்த நிலையில் அப்படி ஒரு அறிய புகைப்படம் தான் நமக்கு சமீபத்தில் கிடைக்கப்பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் காயகவாட். இவரது பெற்றோர்களான ராமோஜி ராவ் காயக்வாடுக்கும்- ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் மராத்தியர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். சூப்பர் ஸ்டாரின் தந்தை ராமோஜி ராவ் கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சி குப்பத்தில் பிறந்தவர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is rajini-1024x807.jpg

அதே போல சூப்பர் ஸ்டாரின் தாயார் கோவையை சேர்ந்தவர் இவரின் தந்தை காவலராகப் பணிபுரிந்தவர். தாய் குடும்பத் தலைவியாக இருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் தான். ஆனால், மராட்டியப் பேரரசர் சிவாஜி பேரரசரின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இவருக்கு இந்த பெயர் வைக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பணிநிறைவிற்குப் பின் சூப்பர் ஸ்டாரின் குடும்பம் பெங்களூர் சென்று அனுமானந்தா நகரில் வீடு கட்டி குடியேறினர். தனது 9 வயதில் தனது தாயை இழந்தார் ரஜினி.

Advertisement