தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு முடிவடைந்தது. மேலும், இந்த இந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வந்தது. அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் வெறித்தனம் என்று கூட சொல்லலாம். இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் தர்ஷன். இவர் இலங்கையை சார்ந்தவர். மேலும்,இவர் தமிழகத்தில் எந்த ஒரு அறிமுகமும், முன் அனுபவம் இல்லாதவராக போட்டியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர்.
இதனைத் தொடர்ந்து தர்சன் இறுதிகட்ட போட்டியாளராக செல்வார் என்றும், பிக் பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னர் ஆகக் கூடிய வாய்ப்பு தர்சனுக்கு உள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவராலும் கூறப்பட்ட வந்த விஷயம். ஆனால், என்ன நடந்தது என்று இன்னும் வரை யாருக்கும் புரியவில்லை. பெரும் அதிர்ச்சியாக இருந்தது தர்சன் உடைய எலிமினேட். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றம் தற்போது கூட யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் பட்டத்தை முகென் தட்டி சென்றார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் தர்சன் தன்னுடைய நண்பர்களுடன் ஆட்டம் ,பாட்டம், கொண்டாட்டம் என பயங்கர ஜாலியாக கொண்டாடி வருகிறார்.
இதையும் பாருங்க : மாமனார் குடும்பத்தை சந்தித்த சூர்யா. ஜோதிகா குடும்பத்தில் இத்தனை பேர்களா.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி நிகழ்வில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் தர்சனை நடிக்க ஒப்பந்தம் செய்வதாக அவர் அறிவித்து இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில் சென்னையில் ராஜ்கமல் அலுவலகத்தின் புதிய கட்டிடம் ஒன்று திறக்கப்பட்டது. அந்த புதிய கட்டிடத்தில் இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்களின் சிலை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. மேலும், அது திறப்பு விழாவில் கமலஹாசன் அவர்கள் பேசியது, ராஜ் கமலின் மூலம் உருவாகும் ஐம்பதாவது படத்தை மிகப் பிரம்மாண்டமான அளவில் தயாரிக்க உள்ளோம்.
மேலும், அதில் நான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த அளவிற்கு ராஜ் கமல் மூலம் நீங்கள் என்னை வளர்த்து விட்டீர்கள் என்று கூறினார். மேலும், ஏற்கனவே ராஜ் கமல் மூலம் தர்ஷன் ஒப்பந்தமாகி இருப்பதால் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் ஐம்பதாவது படத்தில் தர்சன் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், இந்த தகவல் அறிந்த உடன் தர்சன் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் ராஜ்கமல் நிறுவனத்தின் ஐம்பதாவது படம் குறித்த தகவல்கள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தார்கள்.