மாமனார் குடும்பத்தை சந்தித்த சூர்யா. ஜோதிகா குடும்பத்தில் இத்தனை பேர்களா.

0
143315
surya
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. நடிகை ஜோதிகா அவர்கள் 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் உடைய அப்பா பெயர் சந்தர் சாதனா, அம்மா பெயர் சீமா. அதோடு ஜோதிகா அவர்களின் அப்பா சந்தர் சாதனா திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.மேலும்,நடிகை ஜோதிகாவிற்கு நக்மா, ரோஷினி என்ற இரு சகோதரிகளும் சூரஜ் என்ற ஒரு சகோதரனும் உள்ளார்கள். ஜோதிகா குடும்பமே ஒரு கலை குடும்பம் என்று சொல்லலாம். மேலும்,நடிகை ஜோதிகா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். ஜோதிகா அவர்கள் முதன் முதலாக சினிமா துறைக்குள் ஹிந்தி படத்தின் மூலம் தான் என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-

இவர் தமிழில் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின் பூவெல்லாம் கேட்டுப்பார், சினேகிதியே,குஷி, டும் டும் டும், பூவெல்லாம் உன் வாசம், தூள், காக்க காக்க, திருமலை, பேரழகன், சந்திரமுகி, அருள், ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். இவருடைய அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் படங்கள் என்று கூட சொல்லலாம். அந்த அந்த அளவிற்கு அவருடைய எல்லா படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தது. மேலும்,நடிகை ஜோதிகா அவர்கள் நடிகர் சூர்யாவுடன் 7 படத்திற்கு மேல் அவருடன் இணைந்து ஜோடியாக நடித்து உள்ளார். பின் அவர்கள் இருவரும் காதலித்து 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும்,தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள்.

இதையும் பாருங்க : விஜய்யை கிண்டல் செய்த பிரபல விமர்சகர். வன்மையாக கண்டித்த ஆனந்த் ராஜ்.

- Advertisement -

நடிகர் சூர்யாவை பற்றி சொல்லவே வேண்டாம் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர். மேலும், சூர்யா அவர்கள் ‘காப்பான்’ படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா அவர்கள் தன்னுடைய மனைவியான ஜோதிகாவின் குடும்பத்தை சந்தித்து விடுமுறையை கொண்டாடி உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. மேலும், ஜோதிகாவின் சகோதரிகள், சகோதரன், அம்மா அப்பா, அவர்களுடைய குழந்தைகள் என ஒரு பட்டாளமே உள்ளது என்று கூட சொல்லலாம். அவர்களுடன் சூர்யா எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Image result for jyothika family"

ஜோதிகா அவர்கள் திருமணத்திற்குப் பிறகு சினிமா துறையிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள மொழி படமான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு 36 வயதினிலே என்ற தலைப்பும் வைத்தார்கள். பின் ஜோதிகா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா துறைக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.அதுமட்டும் இல்லாமல் 36 வயதினிலே படத்தின் வெற்றி விழாவில் ஜோதிகா அவர்கள் கூறியது ,தன்னுடைய கணவர் சூர்யா அவர்களின் சப்போர்டினால் தான் நடித்தேன். திருமணத்திற்கு பிறகு கணவன், குடும்பம் என நான் அதிலே என்னுடைய கவனம் முழுவதும் இருந்து விட்டது.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இப்போது நடிக்க வேண்டும் என்று கேட்டவுடன் எனக்கு சூர்யா அவர்கள் சப்போர்ட் செய்தார். பின் சினிமா துறையில் பெண்களுக்கு வலிமையான கதை கொண்ட கதாபாத்திரத்தில் மட்டும் நான் நடித்து வருகிறேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து நடிகை ஜோதிகா அவர்கள் பிரம்மா இயக்கத்தின் மகளிர் மட்டும் படத்தில் நடித்துள்ளார். பின் நாச்சியார்,காற்றின் மொழி, ராட்சசி, செக்க-சிவந்த-வானம்,ஜாக்பாட் என பல படங்களில் நடித்துள்ளார்.

Advertisement