வலியால் அவதிப்பட்டுள்ள அஜித். அட்வைஸ் செய்துள்ள ராஜ்கிரண். அதற்கு அஜித்தின் பதில பாருங்க. வீடியோ.

0
5249
ajith-rajkiran
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான விசுவாசம் அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார் நடிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு கார் பைக் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான் அதேபோல பார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கு பெற்ற ஒரே தமிழ் நடிகர் அஜித்தான். இந்த போட்டியில் கலந்து கொண்ட போது விபத்து ஏற்பட்டு இதனால் தனது முதுகில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார் அஜித்.

-விளம்பரம்-

இருப்பினும் பல்வேறு தடைகளுக்கு பின்னரும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் ஒரு சில படங்களில் ரிஸ்க்கான காட்சிகளில் கூட டூப் போடாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார் அஜித். இந்த நிலையில் அஜித், கிரீடம் படத்தின் போது முதுகு வலியால் அவதிப்பட்டும் அதனை பொறுத்துக்கொண்டு நடித்த சம்பவம் குறித்து கூறியுள்ளார் நடிகர் ராஜ்கிரண். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்த ராஜ்கிரண் விஜய் அஜித் தனுஷ் கார்த்தி விஷால் என்று பல்வேறு நடிகர்களில் படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் அஜித்தின் கிரீடம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார் ராஜ்கிரண்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜ்கிரண் பேசுகையில், அஜித் தம்பி எப்போதும் படப்பிடிப்பில் உட்காரவே மாட்டார், என்ன என்று நான் உற்று பார்க்கும் போது தான் தெரிந்தது அவர் முதுகு வலியால் கஷ்டப்படுகின்றார் என்று.பிறகு நானே ஒரு நாள் “ஏன் தம்பி இவ்வளவு கஷ்டப்படுகின்றீர்கள், ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றேன். அதற்கு அந்த தம்பி ‘இல்லை சார், தயாரிப்பாளர் என்னை நம்பி தான் செலவு செய்து வருகின்றார், அவருக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும்’ என்று அவர் கூறியது என்னை பிரமிக்க வைத்தது என்று கூறியுள்ளார் ராஜ் கிரண்.

Related image

-விளம்பரம்-

ஏற்கனவே பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசிய எஸ் ஜே சூர்யா, வாலி படத்தின் போது அஜித், வலியால் அவதிப்பட்டது குறித்து பேசி இருந்தார். (அதைப்பற்றி படிக்க இங்கே க்ளிக் செய்யவும்) இப்படி வலியால் அவதிப்பட போதும் அஜித் நடிப்பிற்காக கொடுத்துள்ள அர்ப்பணிப்பு இப்படி பல ஆண்டுகள் கழித்து தான் இது போன்ற பிரபலங்கள் சொல்லி பலரும் கேள்விப்படுகின்றனர். இதனால் தான் யாரை கேட்டாலும் அஜித்தின் தன்னம்பிக்கை பிடிக்கும் என்று கூறுகிறார்களோ என்னவோ.

Advertisement