இஸ்லாமியர்களின் பொறுமையை தவறாக புரிந்துகொண்டு, கண்ட கழிசடைகள் பேசினால் – ராஜ்கிரணின் எச்சரிக்கை பதிவு.

0
1899
Rajkiran
- Advertisement -

ததமிழ் சினிமா உலகில் “நல்லி எலும்பு” என்று சொன்னால் அனைவருக்கும் நியாபகத்தில் வருவது நடிகர் ராஜ்கிரண். இவர் இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜ்கிரண் மகள் நடிகர் முனிஷ்ராஜாவை பெற்றோர்கள் சம்மதத்தை மீறி திருமணம் செய்துகொண்டார். இதனால் கடுப்பான ராஜ்கிரண் இனி ஜீனத் என் மகளே இல்லை என்று அறிவித்து இருந்தார். தற்போது ராஜ்கிரண் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இஸ்லாமியர்கள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் ராஜ்கிரண். அதில் ;-

-விளம்பரம்-

இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும் அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, தியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல… “இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.

- Advertisement -

இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்”,பொறுமை காக்க வேண்டும் என்று,இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்… இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நடிகர் ராஜ் கிரண், திப்பு சுல்தான் பற்றியும் இஸ்லாம் மதத்திற்கு மாறுவது பற்றியும் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ‘மாவீரர் திப்பு சுல்தான் அவர்கள், இந்திய சுதந்திரப்போராட்டத்தின் “மூலவித்து” என்பதை சரித்திரத்தில் இருந்து நீக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. சூரியனை, குப்பைகளால் மூடி மறைத்து விட, ஒருபோதும் முடியாது. மைசூரை ஆண்ட மாவீரன் திப்பு சுல்தான் இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் பன்முக ஆளுமையாக திகழ்ந்தவர்.

-விளம்பரம்-

கோவில் மணி ஓசைக்கும் பள்ளிவாசலின் பாங்கு அழைப்பிற்கும் சம மரியாதை தந்தார் திப்பு. நெப்போலியனை வீழ்த்திய ஆர்த்தர் வெல்லெஸ்லி கூட திப்புவின் முன் நிற்கமுடியாமல் போனது வரலாறு. தன்னை, நாட்டின் மன்னன் என்று நினைக்காமல், “குடிமகன் திப்பு” என்று கூறுவதில் பெருமைப்பட்டவர் திப்பு. திருக்குர்ஆனின் அத்தனை போதனைகளையும் தன் வாழ்நாளில் கடைபிடித்து வாழ்ந்து வந்தார், திப்பு.

ஆதலால், பிற மதத்தினர், இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறுவதை ஆதரிக்கவில்லை. “இறைவன் நினைத்திருந்தால், எல்லா மக்களையும் இஸ்லாமியராகவே படைத்திருக்க மாட்டானா” என்றதோடு, அவரவர் மார்க்கம் அவரவர்க்கு என்றார். விடுதலை போரில் சரணடைய மறுத்து, வீரத்துடன் போரிட்டு தன்னுடன் மாண்ட 11,000 வீரர்களுள் ஒரு சாதாரண வீரனைப்போல, வீரமரணம் அடைந்தார் திப்பு சுல்தான். இந்தத்தகவல்கள் எல்லாம், புராண, இதிகாச கதைகள் அல்ல லண்டன் அருங்காட்சியகத்தில், இன்றும் போற்றிப்பாதுகாக்கப்படும் வரலாறு’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement