ஈரமான ரோஜாவே 2 சீரியலின் இயக்குனர் திடீர் மரணம் அடைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடர்கள் எல்லாம் இவ்வளவு ஹிட்டாகுவதற்கு காரணம் அந்த சீரியலுடைய இயக்குனர்கள் தான்.
இந்நிலையில் விஜய் டிவி சீரியல் இயக்குனர் தாய் செல்வம் என்பவர் திடீர் மரணம் அடைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த காத்து கருப்பு, தாயுமானவன், கல்யாண முதல் காதல் வரை, மௌன ராகம் சீசன் 1, நாமிருவர் நமக்கிருவர், பாவம் கணேசன் போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களை இயக்கியிருக்கிறார். இவர் சின்ன திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளி திரையில் கூட எஸ் ஜே சூர்யா நடித்து வெளிவந்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்தையும் இயக்கி இருந்தார்.
ஈரமான ரோஜாவே 2:
தற்போது இவர் விஜய் டிவியில் டிஆர்பி யில் முன்னிலையில் வகுத்து வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலை இயக்கி வருகிறார். ஈரமான ரோஜாவே முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி என பல நடிகர்கள் நடிக்கிறர்கள். இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
தாய் செல்வம் மரணம்:
இந்த நிலையில் இந்த சீரியலின் இயக்குனர் தாய்ச்செல்வம் திடீர் மரணம் அடைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவரின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவருடைய மறைவிற்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்த ரக்ஷா தாய் செல்வம் இறப்பிற்கு உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்
ரக்ஷா பதிவு :
எங்கிருந்து தொடங்குவது என்று எனக்கே தெரியவில்லை. தாய் சார் நீங்கள் எனது மிகப்பெரிய பலம் மற்றும் எனது மிகப்பெரிய விமர்சகர். நான் நடித்து கேரக்டருக்காக நீங்கள் என்னை நேசித்தீர்கள். நீங்கள் இனி இல்லை என்று நினைப்பது கூட ஒரு அதிர்ச்சி மற்றும் மிகவும் பேரழிவை ஏற்படுத்துகின்றது. எனக்கு பிடித்த இயக்குனராக இருங்கள் உங்கள் பணி என்றென்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும்.அது மட்டுமல்லாமல் உங்களைப் போன்ற ஒரு அற்புதமான நபரை நான் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இது பெரிய வலி தான் :
என்னை ஒரு சிறந்த கலைஞனாக உருவாக்கி உங்கள் சொந்த குடும்பத்தைப் போல என்னை நடத்தியது. என்னால் முடியவில்லை நீங்கள் எங்களை சுற்றிஇல்லை என்ற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. எந்த வேலையிலும் உங்கள் மீதுள்ள என் அன்பு என்றும் மறையாது. அனைவரையும் நேசிக்கும் தாய் செல்வம் சாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். லவ் யூ, தாய் சார் நிம்மதியாக ஓய்வெடுங்கள்… எல்லாவற்றுக்கும் நன்றி சார். நான் இதை எனது சமூக வலைத்தள பக்கங்களில் இப்படி பதிவிடுவேன் என்று நினைக்கவே இல்லை, உண்மையில் இது பெரிய வலி தான்” என்று உணர்வுபூர்வமாக பதிவிட்டு இருக்கிறார்’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.