சம்பளத்தை குறைத்தும் வராத பட வாய்ப்பு. இறுதியில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங்.

0
4827
rakulpreet

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் ராகுல் பிரீத் சிங். இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், இந்தி போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். முதலில் இவர் ரீமேக் படங்களில் தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் முன்னணி நடிகர்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. நடிகை ரகுல் பிரித் சிங் ‘தடையறத் தாக்க’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகம் ஆனார்.

Image result for rakul preet singh sad

- Advertisement -

இவர் தமிழில் தீரன், ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை ராகுல் ப்ரீத் சிங் அவர்கள் சைவத்திற்கு மாறி இருப்பதாக சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். தற்போது ராகுல் பிரீத் சிங் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : கொரோனா பாதிப்பு. நான் சேர்த்து வைத்த பணம். இன்னும் செய்வேன் – பிரகாஷ்ராஜுக்கு குவியும் பாராட்டு.

-விளம்பரம்-

அந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் பிரித் சிங் அவர்கள் ஹிந்தியில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். வழக்கமாக பாலிவுட் படங்களில் நடிகைகள் கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. அதிகமாக நடிகைகள் கவர்ச்சி வேடங்களில் தான் நடிப்பார்கள்.

நடிகை ராகுல் பிரீத் சிங் அவர்கள் பாலிவுட்டில் கவர்ச்சி வேடத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது இவர் ஒரு படத்தில் காமெடி கலந்த ஹீரோயின் வேடத்தில் நடிக்கிறாராம். முதன்முறையாக நடிகை ராகுல் பிரீத் சிங் அவர்கள் காமெடியில் நடிக்கப் போகிறார் என்று சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. இந்த படத்தை இந்திர குமார் இயக்குகிறார். ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரகுல் ப்ரீத் சிங் நான் படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து தவறு செய்து விட்டேன். அந்த தவறு இப்போது தான் எனக்கு புரிகிறது. தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் எனக்கு பிரச்சனை கொடுத்ததில்லை. சம்பள விஷயத்தில் விட்டுக்கொடுத்து யாருடனும் தகராறு செய்வதில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for rakul preet singh ajay devgn

கடந்த ஆண்டு இந்திர குமார் மற்றும் அஜய் தேவ்கன் கூட்டணியில் வெளியான ‘டோட்டல் தமால்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜய் தேவ்கன் – இந்திர குமார் கூட்டணி தற்போது மீண்டும் இணைகிறது. மேலும், ‘தேங்க் காட்’ என்று இப்படத்திற்கு பெயர் இடப்பட்டு உள்ளது. இப்படத்தில் அஜய் தேவ்கனுடன், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ளனர். அஜய் தேவ்கன் மற்றும் டி சீரிஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

Advertisement