வெளிநாட்டில் சூர்யா, கார்த்தி பட நடிகையுடன் Golf விளையாடிய சத்குரு. வைரலாகும் வீடியோ (மனுஷன் வாழறாருபா )

0
344
rakul
- Advertisement -

சத்குரு ஜக்கி உடன் நடிகை ராகுல் ப்ரீத் சிங் கோல்ப் விளையாடிய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக நடிகை ரகுல் பிரித் சிங் திகழ்ந்து வருகிறார். இவர் தன்னுடைய 18 வயதிலேயே மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதற்குப் பின்னர் அவர் சினிமாத் துறையில் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் ‘தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகம் ஆகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் தீரன், ஸ்பைடர், தேவ் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் என்ஜிகே. இந்த படம் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் அதிகம் தெலுங்கு மொழியில் தான் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சாமி படத்துல அந்த சீனை எடுத்ததுக்காக இப்போ வருத்தப்படுறேன் – பல ஆண்டு கழித்து வருத்தப்பட்ட ஹரி

அயலான் படத்தில் ராகுல் பிரீத் சிங்:

இதனிடையே நடிகை ராகுல் பிரீத் சிங் அவர்கள் பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான Jackky Bhagnani-யை காதலிப்பதாக கூறி இருந்தார். இருந்தாலும் இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் படத்தில் நடித்து இருக்கிறார். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரவிக்குமார் தான் அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-

ராகுல் பிரீத் சிங் நடிக்கும் படம்:

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

சத்குரு ஜக்கி உடன் ரகுல் ப்ரீத் சிங்:

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் இன்னும் நிறைய படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் சத்குரு ஜக்கி உடன் விளையாடி இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

வைரலாகும் வீடியோ:

அதாவது, அந்த வீடியோவில் நடிகை ராகுல் பிரீத் சிங் அவர்கள் வாஷிங்டனில் சத்குரு ஜக்கி உடன் சேர்ந்து கோல்ப் விளையாடியிருக்கிறார். இவர்களுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ்வும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement