சாமி படத்துல அந்த சீனை எடுத்ததுக்காக இப்போ வருத்தப்படுறேன் – பல ஆண்டு கழித்து வருத்தப்பட்ட ஹரி

0
805
hari
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வருகிறார். இருந்தாலும் பல வருடங்களாக இவர் ஹிட் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. அதற்கு பின் இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் மிரட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஓ மை டாக். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அருண் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் யானை. இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருஙக : மறுமணம் குறித்து கேட்ட ரசிகர் – அமலா பால் சொன்ன பதில். இது தான் பிரச்சனையாம்.

யானை படம்:

இவர்களுடன் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து இருக்கிறது. மேலும், யானை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் யானை படம் குறித்து நல்ல விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

இயக்குனர் ஹரி அளித்த பேட்டி:

இந்த நிலையில் யானை படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை இயக்குனர் ஹரி பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு சினிமா நிறைய அனுபவங்களை தந்திருக்கு. சினிமாவில் இருப்பது சந்தோஷம் தான். அதில் தொடர்ந்து வேலை பார்ப்பது இன்னும் சந்தோஷம். இத்தனை நாள் சினிமா எனக்கு கொடுத்ததற்கு நன்றி கடனாக என் வேலையை ஒழுங்கா செய்து கொண்டிருக்கிறேன். இப்பதான் அருண் விஜய்யும், நானும் சேர்ந்து ஒண்ணா வேலை பார்த்து பார்த்தோம்.

அருண் விஜய் குறித்து சொன்னது:

இதுக்கு முன்னாடி அவரும் கேட்டதில்லை, நானும் கேட்டதில்லை. ஆனால், அவர் இந்த இடத்திற்கு வருவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டார். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். வந்தவுடனேயே நான் அவரை இழுத்துவிட்டேன். எனக்கு தேவை மக்கள் விருப்பமான ஒரு கமர்சியல் ஆக்டர். நான் கமர்சியல் படம் தான் பண்ண போறேன். எனக்கு பாலா சார் மாதிரி முழு நேர சினிமா படைப்புகள் எல்லாம் பண்ண தெரியாது. அருண் விஜய்யின் தடம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

சாமி படம் குறித்து சொன்னது:

அதே போல் விக்ரமின் சாமி படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் அப்படியே யோசித்து அப்படியே நடந்தது தான். அதில் வரும் ஒரு காட்சி இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடுவது. அப்போது லோக்கலாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அதுக்காக இப்ப நான் வருத்தப்படுகிறேன். ஏனென்றால், நான் போதை பழக்கத்திற்கும், மதுவுக்கும் எதிரானவன். இனிமேல் வர சந்ததிகளை எல்லாம் மது இல்லாமல் நல்ல வழியில் கூட்டிட்டு போவோம் என்றுபல விஷ் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.

Advertisement