அவளுக்கு இந்த வயசுல இருக்க பையன் தான் வேணுமா. மகளின் திருமணம் ரகுல் ப்ரீத் சிங்கின் தயார்.

0
1736
rakulpreet

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். 2009-ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளி வந்த திரைப்படம் ‘கில்லி’. இந்த படத்தினை இயக்குநர் ராகவ் லோகி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக குருராஜ் ஜக்கேஷ் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். இது தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக அறிமுகமான முதல் கன்னட திரைப்படமாம்.

De De Pyaar De Actor Rakul Preet Singh and Family Feeds 200 ...

இதனைத் தொடர்ந்து ‘யுவன்’ என்ற தமிழ் படத்தில் நடித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ‘யுவன்’ படத்துக்கு பிறகு அருண் விஜய்யின் ‘தடையறத் தாக்க’, சத்யாவின் ‘புத்தகம்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்தார் ரகுல் ப்ரீத் சிங். அதன் பிறகு கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், அடுத்ததாக தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார்.

இதையும் பாருங்க : ஒரு வருடத்திற்கு 1 ரூபாய் சம்பளம் வாங்க ரெடி. அறிவித்த பிக் பாஸ் 1 நடிகை. யாரு தெரியுமா ?

- Advertisement -

அதன் பிறகு தமிழ் திரையுலகில் மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’, காரத்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று, தேவ்’, சூர்யாவின் ‘NGK’ ஆகிய படங்களில் நடித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கன்னடம், தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் ஹிந்தி மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங்குடன் இணைந்து அவரது அம்மா ரினி சிங் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.

Bollywood Actress Rakul Preet Singh Reveals About His Parents ...

அந்த பேட்டியில் ரினி சிங், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமணம் தொடர்பாக பேசுகையில் “நான் பல முறை அவளிடம் திருமணம் குறித்து சொல்லி விட்டேன், ஒரு நல்ல பையனை நீயே பாரு என்றும் கூட சொல்லி விட்டேன். ஆனால், அவள் என் பேச்சை கேட்க மறுக்கிறாள். ஆகையால், நாங்கள் தான் அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்க்க வேண்டும்.அவளை விட சிறந்த ஒருவரை அவளுக்கு வேண்டும். அவள் 20 வயதாக இருந்தால், 18 வயதுடைய ஒருவர் கூட ஓகே. ஆனால் அவள் 21 வயதை உடையவரை கேட்கிறாள்” என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங் பேசுகையில் “உண்மையான பிரச்சனை என்னனா, எங்க அம்மா என்னோட டிசிப்ளினை பார்த்து வர்ற மாப்பிள்ளை எல்லாம் என்ன பார்த்து பயந்து ஓடிருவாங்களோன்னு நினைக்குறாங்க. எங்க அம்மா அடிக்கடி திருமணம் பற்றி கூறிக் கொண்டே தான் இருப்பாங்க. ஆனால், நான் இப்போது அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். வேலை தான் எனக்கு முக்கியம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement