ஒரு வருடத்திற்கு 1 ரூபாய் சம்பளம் வாங்க ரெடி. அறிவித்த பிக் பாஸ் 1 நடிகை. யாரு தெரியுமா ?

0
2212
aarthi
- Advertisement -

கொரோனாவினால் உலகமே திண்டாடி கொண்டு இருக்கிறது. கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்கள். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல பேர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதே போல கொரோனா பாதிப்பால் திரையுலகமும் பெரிதும் பாதித்துள்ளது. சினிமாவை நம்பி இருக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் தற்போது வேலை இல்லாததால் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு திரைப்பட சங்கம் நிதி திரட்டி உதவி செய்து வருகிறது. இவர்களை போலவே பணம் போட்டு தயாரித்த படங்கள் வெளிவராததால் தயாரிப்பாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : படுக்கைக்கு அழைக்க அது தான் கோட் வேர்ட். ‘காமசூத்ரா’ நடிகை சொன்ன பகீர் தகவல்.

- Advertisement -

தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை மனதில் கொண்டு ஒரு சில நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்வதாகவும் அறிக்கை வெளியிட்டு இருந்தனர். ஆனால், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஆர்த்தி ஒரு படி மேலே போய் 1 வருடத்திற்கு 1 ரூபாய் சம்பளத்திற்கு நடிக்க தயார் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தன்னை படங்களில் கமிட் செய்தால் எனக்கு கொடுக்கும் சம்பளத்தை பகிர்ந்து அதில் ஒரு 10 பேருக்கும் அதே படத்தில் வேலை வாய்ப்பை ஏற்பாடு செய்து கொடுத்து அவர்களுக்கு அந்த பணத்தை கொடுங்கள் என்றும் கூறியுள்ளார். ஆர்த்தியின் இந்த நல்ல முயற்சியையும் குணத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement