சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள மக்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,342 -த்தை நெருங்க உள்ளது. இதுவரை இந்த நோயினால் 1,886 பேர் பலியாகியும் உள்ளார்கள்.
வல்லரசு நாடுகள் கொரோனா தொற்றை கட்டுபடுத்த முடியாமல் திணறி வரும் நிலையில் நேற்று (மே 7) முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுஅறிவித்திருந்தது. இந்த அறிவிப்பால் குடிமகன்கள் நிம்மதி அடைந்தாலும் பெரும்பாலான மக்கள் இப்படி ஒரு இக்கட்டான சூழ் நிலையில் மதுக்கடையை திறக்க அனுமதித்தது குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பாருங்க : கடந்த 3 நாட்களாக அதிக ஆல்கஹால் – காஜல் போட்ட இந்த டீவீட்டை பாத்தீங்களா இல்லையா ?
இருப்பினும் நேற்று மட்டும் ஒரே நாளில் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரில் மதுக்களை வாங்க பெண்கள் கூட வரிசையில் நின்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் தமிழில் தீரன்,Ngk,ஸ்பைடர் போன்ற படங்களில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் சரக்கு வாங்கி சென்றதாக வீடியோ ஒன்று வைரலானது.
இந்த வீடியோ குறித்து தனது சமூக வலைதளத்தில் விளக்கமளித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், தான் மருந்து வாங்க சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, அந்த வீடியோவை கேளி செய்யும் விதமாக, வாவ், மருந்து கடைகளில் மது விற்பார்கள் என்பது எனக்கு இதுவரை தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ஆதரவாக ரசிகர்களும் கமன்ட் செய்து வருகின்றனர்.