10 ஆண்டு கழித்து பிறந்த தேவதை – பெயர் சூட்டு விழாவில் வித்யாமான பெயரை வைத்த ராம் சரண்

0
1142
- Advertisement -

ராம்சரண்- உபாசனா குழந்தையின் பெயர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.

-விளம்பரம்-

தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். ராம் சரண் அவர்கள் நடிப்பது மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். சமீபத்தில் நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த RRR என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது.

- Advertisement -

ராம்சரண்- உபாசனா திருமணம்:

இதனைத் தொடர்ந்து ராம்சரண் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் ஆர் சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து இவர் பாலிவுட் படம் ஒன்றில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அதோடு இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் ராம் சரண் தந்தையாகும் செய்தியை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். மேலும், சில தினங்களுக்கு முன் தான் ராம்சரண்-உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், ராம்சரண்- உபாசனா தம்பதி முதன் முதலாக தங்களுடைய குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ராம்சரண் அளித்த பேட்டி:

அப்போது பத்திரிகையாளர்கள் ராம்சரணை சூழ்ந்திருக்கிறது; அப்போது ராம்சரண் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியது, கடந்த 20 ஆம் தேதி எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தாயும் சேயும் நன்றாக இருக்கிறார்கள். டாக்டர் சுமன்னா மனோகர், டாக்டர் ரூமா, டாக்டர் லதா காஞ்சி, பார்த்தசாரதி, தேஜஸ்வினி உள்ளிட்ட பல மருத்துவர்கள் சிறந்த சிகிச்சை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய மகள் பிறந்த செய்தியை கேட்டவுடன் சமூக வலைத்தளம் மூலமும், தொலைபேசி மூலமும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறுகிறேன்.என்னுடைய மகள் பிறந்த தேதியிலிருந்து நாட்கள் கழித்து பெயர் சூட்ட இருக்கிறோம். அவளுக்கான பெயரை நானும் உபசனாவும் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். அது என்ன பெயர் என்பதை விரைவில் உங்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம் என்று கூறி இருந்தார்.

மகளுக்கு வைத்து பெயர் :

இந்த நிலையில் சற்று முன்னர், ராம்சரண் – உபாசனா ஜோடி, தங்களின் குழந்தையின் தொட்டில் போடும் விழாவை நிறைவு செய்த பின்னர், குழந்தைக்கு க்ளின் காரா கோனிடேலா என வித்தியாசமாக, வைத்துள்ள பெயரை அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ராம் சரணுக்கும் அவரின் மனைவிக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement