‘இசக்கி – தனபால் ஒருபக்கம் இருக்கட்டும்’ – ரத்னவேல் தான் எடப்பாடியா ? உதயநிதியின் ட்விட்டர் பதிவால் கிளம்பிய புதிய சர்ச்சை.

0
1035
- Advertisement -

மாமன்னன் படத்தின் வடிவேலு கதாபாத்திரம் முன்னாள் ஆளுநர் தனபாலின் கதை என்று சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் சென்று கொண்டு இருக்கும் வேளையில் தற்போது உதயநிதியின் டீவீட்டால் இந்த படத்தில் வில்லனாக நடித்த பஹத் பாசில் கதாபாத்திரம் எடப்பாடி பழனி சாமி சென்ற விவாதம் துவங்கி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். நேற்று உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடிங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்றும் அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன்.

முன்னாள் ஆளுநர் தனபால் :

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தேவர் மன்னன் இசக்கி தான் மாமன்னன் என்று மாரி செல்வராஜ் பேசி இருந்தார். இந்த நிலையில் இந்த படம் வெளியானதில் இருந்து வடிவேலு நடித்த இசக்கி கதாபாத்திரம் தான் முன்னாள் சபா நாயகர் தனபாலின் உண்மை சம்பவம் சென்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக சபாநாயகர் தனபால் இடம் கேட்டபோது அவர் கூறியிருந்தது, சோசியல் மீடியாவில் வருவதெல்லாம் உண்மைதான். நேற்றிலிருந்து நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டு இந்த படம் தொடர்பாக பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், அமைச்சர் உதயநிதி நடிக்க அவங்க குடும்ப நிறுவனம் தயாரித்த படத்தின் கதை என்னைப் பற்றி இருக்கும் என்று அவர்கள் சொல்லி தான் தெரிந்து கொண்டேன். நான் 70களில் இருந்து அதிமுகவில் இருக்கிறேன். என்னுடைய விசுவாசத்தையும் கட்சிப் பணியில் நான் காட்டிய ஆர்வத்தையும் பார்த்து தான் அம்மா எனக்கு பெரிய பெரிய பதவிகள் தந்தார்கள். கட்சியில் அமைப்பு செயலாளர் ஆக்கினார். அதற்கு பிறகு தான் அமைச்சர் ஆனேன். இதனைத்தொடர்ந்து துணை சபாநாயகர் பிறகு சபாநாயகர் ஆனேன்.

இது போன்ற எல்லா பதவிகளும் அம்மா என் மீது நம்பிக்கை வைத்து தந்தது தான். அந்த நம்பிக்கைக்கு சீர்குழையாமல் நானும் என் பதவி காலத்தில் திறமையாக பணிபுரிந்தேன். மீதி இருக்கும் காலத்தில் இந்த இயக்கத்துக்காகவே உழைப்பேன். தற்போது வெளிவந்த மாமன்னன் படம் என் கதையின் சாயலில் இருக்கிறன்றது என்றால், அது அம்மாவிற்கு கிடைத்த வெற்றியாக தான் நான் பார்க்கிறேன். அதுக்காக படத்தை எடுத்து அதில் நடித்த உதயநிதிக்கு நன்றி. படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. இனிமேல் தான் பார்க்கணும் என்று தனபால் கூறியிருக்கிறார்.

ரத்னவேல் தான் எடப்பாடியா :

இப்படி ஒரு நிலையில் ட்விட்டர் பயனர் ஒருவர் ‘தனபால்தான் மாமன்னன் என்று முடிவெடுத்த ஊடகங்கள் அவர் அங்கே இருந்த காலத்தில் அந்த மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதையும் பதிவு செய்து, எடப்பாடி அவர்களையும் பேட்டி எடுத்து ‘நீங்க இப்படிதான் நாயெல்லாம் அடிச்சு கொன்னீங்களா என்று கேட்க முன்வரவேண்டும்’ என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு உதயநிதி சிரிக்கும்படியான எமோஜி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்து இருக்கிறார். அப்போது செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினிடம், படத்தில் சமூக நீதி இருந்தாலும் நிஜத்தில் வேங்கை வயல் சம்பவம் போல் நடக்கிறது என்று கேட்டிருந்தார்கள். அதற்கு உதயநிதி, மக்கள்தான் மாறவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement