தமிழ் சினிமாவின் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்ட சிம்ரன், தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார் சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான். இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர்.
Thank you 🙏 @behindwoods https://t.co/Ivqbw0dD01
— Simran (@SimranbaggaOffc) April 10, 2023
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் நடித்த பல்வேறு படங்களுக்கு இவரது சிறப்பான நடிப்பில் இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லி கதாபாத்திரம் என்று நடிகை சிம்ரன் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது.
திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் சிம்ரனின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் சிம்ரனின் கணவர் மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை போலவும் சிம்ரனின் மகன் விக்ரம் மகன் துருவ் போலவும் இருக்கின்றனர்.
மேலும், சிம்ரன் மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் அடுத்த துருவ் உருவாகி வருகிறார் என்று கமன்ட் செய்ய துவங்கிவிட்டனர். மேலும், தனது செகண்ட் இன்னிங்ஸ்ஸை தொடர்ந்த சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்திலும் தனது இளமை தோற்றத்தை இழக்காமல் இருந்து வந்தார் சிம்ரன். பேட்ட படத்தை தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. மேலும், விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்து இருந்தார் சிம்ரன். பொதுவாக 40 வயதை தாண்டும் நடிகர் நடிகைகள் பலரும் சினிமாவில் வயதான தோற்றத்தில் நடித்தாலும் நிஜத்தில் தங்களை இளமையாக காண்பித்துக்கொள்ளவே விரும்புவர்.
அதனால் மேக்கப் போட்டுகொண்டு தலைக்கு டை அடித்து கொண்டு தங்களுக்கு வயதே ஆகாதது போல சுற்றி வருவார்கள். அதிலும் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டியது இல்லை. ஆனால், தற்போதும் சினிமாவில் நடித்து வரும் சிம்ரன், அஜித்தை பல நிஜத்திலும் தனது தோற்றத்தை மறைக்காமல் இப்படி வெள்ளை முடியுடன் சுற்றி வருவதை கண்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.