பிரபல நடிகையின் கன்னத்தை கிள்ளிய மணிரத்னம். போட்டோவை பகிர்ந்து கொளுத்தி போட்ட சர்ச்சை இயக்குனர்.

0
25806
manirathnam
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் மிகப் பிரபலமான இயக்குனர் என்று சொன்னால் இயக்குனர் மணிரத்தினம் அவர்களைச் சொல்லலாம். ஏன்னா அவர் அந்த அளவிற்கு சூப்பர் டூப்பர் படங்களை தமிழில் இயக்கி உள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தன்னுடைய கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் என்ற தகவல் சில நாட்களாகவே இணையங்களில் பரவி வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் மணிரத்னம், பெண்ணின் கன்னத்தை கிள்ளி வெக்கப்பட்டுள்ளதாக பிரபல சர்ச்சை இயக்குனர் ஒருவர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும், இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : தனது பள்ளியின் farewell-வின் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட தெய்வமகள் சீரியல் நடிகர்.

- Advertisement -

நேற்றுடன் இவர் தமிழில் அறிமுகமான காற்று வெளியிடை படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆனதை அடுத்து இவர் காற்று வெளியிடை படத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், அதில் ஒரு புகைப்படத்தில் மணிரத்னத்துக்கு ரோஸ் கொடுக்கும் அதிதியின் கன்னத்தை கிள்ளுவது போல இருந்தது.

இந்த புகைப்படத்தை பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, முதல் முறையாக சீரியசான இயக்குனர் மணிரத்னம் வெக்கப்படுவதை பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். உண்மையாகவே மணிரத்னம் வெட்கப்பட்டதை காட்ட அந்த புகைப்படத்தை பதிவிட்டாரா?, இல்லை அவர் அதிதிராவ் கன்னத்தை மணிரத்னம் கிள்ளுவதை காட்ட நினைத்தாரா என்பது தான் தெரியவில்லை.

-விளம்பரம்-

மேலும், ராம் கோபால் வர்மாவும் சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் தான். சமீபத்தில் கூட தனக்கு கொரோனா இருப்பதாக கூறி இருந்தார். பின்னர் ஏப்ரல் fool செய்ததாக கூறி ரசிகர்களை கடுப்பாக்கினார். அதே போல சமீபத்தில் மோடி கொரோனா விழிப்புணர்வுக்காக வீட்டில் விளக்கேற்ற சொன்ன போது சிகெரெட்டை பற்ற வைத்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார் ராம் கோபால் வர்மா.

Advertisement