தனது பள்ளியின் farewell-வின் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட தெய்வமகள் சீரியல் நடிகர்.

0
3957
krishna
- Advertisement -

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களும் வெற்றியடைந்து விடுவதில்லை. அதேசமயத்தில் சில சீரியல்கள் எதிர்பார்த்ததை விட வெற்றியடைந்து மக்களின் இதயத்திலும் என்றுமே நீங்காத இடம்பிடித்து விடுகின்றன. அப்படி எதிர்பார்த்ததை விடவும் அமோக வெற்றிபெற்ற சீரியல் தான் தெய்வமகள். இந்த சீரியல் 5வருடங்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடியது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வெற்றிகரமான சீரியலில் இந்த சீரியலும் ஒன்று என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் முக்கியமான வேடத்தில் பிரகாஷாக நடித்திருப்பவர் கிருஷ்ணா. இவருக்கு ஜோடியாக சத்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் வாணி போஜன். இந்த சீரியலின் மூலம் கிடைத்த வெற்றியால் தற்போது வாணி போஜன் சினிமாவில் நடிகையாக கலக்கி வருகிரியார். ஆனால், கிருஷ்ணாவிற்கு சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்பு அமையவில்லை. நிஜத்தில் கிருஷ்ணாவின் மனைவி திருடா திருடி பட கதாநாயகி “மன்மதராசா” பாடால் பேமஸ் சாயாசிங் தான்.

- Advertisement -

இவர்கள் திருமணம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாயாசிங் தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகர்களில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகையால் திருமணத்திற்குப் பின்னர் சீரியல் பக்கம் திரும்பிய சாயாசிங் திரைப்படத்திலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரன் தொடரில் தனது கணவர் கிருஷ்ணாவுடன் நடித்து வருகிறார்.இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் தெய்வமகள் சீரியல் அளவிற்கு சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பை பெறவில்லை. தெய்வமகள் கிருஷ்ணா சீரியலில் நடிப்பதற்கு முன்பாக பல்வேறு படங்களில் கூட நடித்திருக்கிறார். அழகிய அசுரா, பத்து பத்து ,ஈரம், பலம், ஆனந்தபுரத்து வீடு போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் கிருஷ்ணா.

-விளம்பரம்-

அதேபோல சன் தொலைக்காட்சியில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஒளிபரப்பான குகன் என்ற தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் கிருஷ்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் பள்ளியின் farewell dayவின் போது எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இதில் பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் கிருஷ்ணா.

Advertisement