90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத விக்ரமாதித்யா சீரியல் முதல் அழகி, ரமணா படம் வரை நடித்த இவரை ஞாகபம் இருக்கா. இப்போ எப்படி இருக்காங்க ?

0
1247
ramana
- Advertisement -

குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ருதி. இவர் ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் இவருக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின் அதனை தொடர்ந்து படங்களில் நடித்தார். நடிகர் பார்த்திபன் நடித்த அழகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் நடிகை ஸ்ருதி. அந்த படத்திற்கு பின்னர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த வெற்றி படம் ஆன ரமணா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். அதன் பின்னர் 2006 இல் வெளியான நடிகர் பண்டியராஜனின் மகன் நடித்த கை வந்த கலை படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் சரியாக ஓடாததால் மீண்டும் இவர் சின்னத்திரைக்கு சென்றார். அங்கும் இவர்க்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

நடிகை ஸ்ருதி முறையாக பரதநாட்டிய கலையை கற்றவர். அதனால் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடனநி கழ்ச்சியில் பங்குபெற்றார். அதற்கு பின்னர் இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்நிலையில் நடிகை ஸ்ருதி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய சினிமா அனுபவத்தை பற்றி பகிரிந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நான் இப்போது ஜெர்மனியில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் நடிக்கணும் என்ற ஆசை, கனவு எல்லாம் கிடையாது. ஆனால், எனக்கு நடனம், பாட்டு பாடுவதில் ஆர்வம் இருந்தது. பின் வளர வளர என்னுடைய கேரியர் மாறிவிட்டது.

- Advertisement -

நான் சினிமா துறையில் முதல் முதலாக நுழைந்தது இரண்டாவது படித்துக் கொண்டிருக்கும் போது தான். நான் படிக்கும் பள்ளியிலேயே அம்மாவும் நடன ஆசிரியராக இருந்தார். பள்ளி முடிந்தவுடன் அம்மா வரும் வரை நான் காத்திருப்பேன். அப்போது ஒரு விளம்பரம் தயாரிக்கும் நபர் ஒருவர் என்னை பார்த்து விட்டு அம்மாவிடம் நடிப்பதற்கு கேட்டார்கள். அம்மா என்னிடம் கேட்டார்கள். நானும் சரி என்று சொன்னேன். அப்போ எனக்கு சின்ன வயது ஒன்னும் தெரியாது. பின் சரி என்று நான் சொன்னேன். அப்படி தான் நான் சினிமா துறையில் நுழைந்தேன். பிறகு நான் விளம்பரங்களில் நிறைய நடித்தேன். அதன் மூலம் தான் நான் சீரியல்களில் நடித்தேன். அதற்கு பிறகு தான் நான் படத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.

அப்போ சின்ன வயது என்பதால் எனக்கு எதுவும் தெரியல. படத்தில் நடிக்கவும், டயலாக் மெமரி பண்ணுவதும் எனக்கு கஷ்டமாக தெரியல. பின் நான் படித்துக் கொண்டும் சினிமாவில் நடித்துக் கொண்டும் இருந்தேன். சின்ன வயசில் ஈசியாக இருந்தது. பின் போகப் போக எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. மானாட மயிலாட நிகழ்ச்சியில் நான் நடனம் ஆடும்போதும் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போ எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. படிக்க முடியாமல் தவித்தேன். பிறகு ஏதாவது ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்து நான் சினிமாவை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement