கமலின் விக்ரம் தான் கோலிவுட்டை காப்பாற்றியது,ஜெயிலர் என்ன செய்தது – ட்விட்டரில் கமல் ரசிகர்கள் கேள்வி.

0
1910
Vikram
- Advertisement -

ஜெயிலர் படத்தை விமர்சித்து கமல் ரசிகர்கள் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே ஜெயிலர் படம் குறித்த செய்திகள் தான். தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

கடைசியாக இவர் விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இருந்தாலும் முயற்சியை கைவிடாமல் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை எடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி தான் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஸ்வேதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் முதல் நாளில் 100 கோடியையும், மூன்றாவது நாளில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியானது.

படத்தின் வசூல்:

மேலும், முதல் வாரத்தின் முடிவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக கலெக்ஷன் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், இதை சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. அது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இதை பார்த்த விஜய் ரசிகர்கள் லியோ படம் வந்தால் உண்மை என்னவென்று தெரிந்து விடும் என்று பதில் கொடுத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விக்ரம் படம்:

இன்னொரு பக்கம் கமல் ரசிகர்கள் ஒரு படிக்கு மேல போய், விக்ரம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். அதாவது, கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா, நரேன், காயத்ரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். கடந்த ஆண்டு வெளியான படத்திலேயே சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்தது விக்ரம் படம் தான். பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் 600 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து மாஸ் கட்டி இருந்தது.

கமல் ரசிகர்கள் பதிவு:

அதுமட்டுமில்லாமல் விக்ரம் படத்தின் வெற்றிக்கு திரையரங்க உரிமையாளர்கள், பிரபலங்கள் பலரும் கமலுக்கு நன்றி தெரிவித்திருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் கொரோனா காலத்திற்கு பிறகு திரையரங்குகளுடைய நிலைமை என்ன ஆகும்? என்று பயத்தில் இருந்தவர்களை தூக்கி நிறுத்தி காப்பாற்றி நம்பிக்கை கொடுத்ததே விக்ரம் படம் தான். எந்த ஒரு நிலையிலும் கமலஹாசன் வசூலில் மேல செல்லக்கூடியவர். அவரிடத்தை யாராலும் பிடிக்க முடியாது. கமல் படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது போல் ஜெயிலர் படத்தால் சாதனை படைக்க முடியாது என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

Advertisement