சின்னத்திரை வரலாற்றிலேயே பிளாக்பஸ்டர் வெற்றி தொடராக அமைந்த “ரமணி Vs ரமணி” தொடரை மீண்டும் புதிய சீசனாக ஒளிபரப்ப இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். மக்களின் பொழுது போக்கு அம்சமாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் சீரியல்கள் மக்களின் பொழுது போக்காக மட்டுமில்லாமல் பல அனுபவங்களை தருகிறது. குடும்ப ட்ராமா என்ற அடிப்படையில் சிறப்பான நகைச்சுவை ஊட்டும் அட்டகாசமான கதைக்களத்துடன் ஒவ்வொரு சேனலும் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. இதில் பல தொடர்கள் மக்களின் பேவரேட்டாக உள்ளது. அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடர் ரமணி VS ரமணி.
சின்னத்திரை வரலாற்றிலேயே பிளாக்பஸ்டர் வெற்றி தொடராக இது அமைந்தது. இந்த தொடரை தற்போது மீண்டும் புதிய சீசனாக ‘ரமணி Vs ரமணி 3.0’ ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும், இந்த மாதிரி ஒரு தொடர் அடுத்தடுத்த சீசனுக்காக வருவது சில தான். அந்த வகையில் ரமணி VS ரமணி தொடரின் 3வது சீசன் வெளியாக உள்ளது. தமிழ் சின்னத்திரை வரலாற்றில் மாபெரும் சாதனைகளைப் படைத்த கவிதாலயா புரோடக்சன் நிறுவனத்தின் தொலைக்காட்சி பிரிவான மின்பிம்பங்கள் நிறுவனம் இந்த தொடரை தயாரித்து இருந்தது.
‘ரமணி Vs ரமணி 3.0’ சீரியல்:
இன்று வரையிலும் நகைச்சுவை தொடர்களை இந்த நிறுவனம் வரிசையாக தந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் தளங்களிலும் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், குடும்ப டிராமா என்ற அடிப்படைகளில் மிக சிறப்பான நகைச்சுவை பாணியில் அட்டகாசமாக உருவாக்கப்பட்ட தொடர். மேலும், இந்த தொடரின் இரண்டு சீசன்களும் பிளாக்பஸ்டர் கொடுத்தது. தற்போது இத்தொடரின் 3வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் இரண்டாவது சீசனில் கதாநாயகனாக நடித்த ராம்ஜி மீண்டும் மிஸ்டர் ரமணியாக நடிக்கிறார்.
‘ரமணி Vs ரமணி 3.0’ சீரியலில் நடிக்கும் நடிகர்கள்:
முதல் சீசனில் மிஸஸ் ரமணியாக நடித்த நடிகை வாசுகி ஆனந்த் மீண்டும் இந்த சீசனில் மிஸஸ் ரமணியாக நடிக்கிறார். இவர்களது மகள் ராகினியாக பொன்னி சுரேஷ் மற்றும் மகன் ராம் வேடத்தில் பரம் குகனேஷ் நடிக்கிறார். பின் கோபிநாத், பரத், விக்னேஷ்வரி ஆகியோர் திரைக்கதை, வசனம் எழுதுகிறார். இதற்கு சதீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ரெஹான் இசை அமைக்கிறார். முதல் இரண்டு சீசன்களையும் இயக்கிய இயக்குனர் நாகாவே இயக்க இருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் நாகா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
இயக்குனர் நாகா அளித்த பேட்டி:
அதில் அவர் கூறியிருப்பது, குடும்ப வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள், கண்ணீர், மகிழ்ச்சி என எல்லாம் இருக்கிறது. எல்லாக் குடும்பத்திலும் இதுதான் இருக்கும். இந்த பொதுமை என்பது புவியியல் எல்லைகளை மட்டுமல்ல இனம், மதம், சாதி ஆகிவற்றை கடந்தது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய குடும்பங்கள் சில விஷயங்களில் தனித்துவமாக இருக்கிறது. தாத்தா, பாட்டி, மகன்கள், மகள்கள், சித்தி, சித்தப்பா என்று குடும்பங்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் வாழும் கூட்டுக்குடும்பம். காலங்கள் சென்றாலும் ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்த உறவினர்கள் மறையாது. இப்படி இருக்கும் உறவினர்கள் வாழ்க்கையில் ஏதாவது பாதிப்புகள் எப்போவாவது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது.
‘ரமணி Vs ரமணி 3.0’ கதை:
அதனால் மக்கள் இன்றைக்கும் தனித்தனியாக வேறு இடங்களில் வாழ்ந்தாலும் கூட்டுக்குடும்ப மனநிலையில் தான் வசித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் வாழும் குடும்பங்களுக்கு வெளி உலகத்திலிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தவிர ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் ஈகோ மோதல்கள், தலைமுறை இடைவெளிகள், துயரங்கள், குழந்தை வளர்ப்பு போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றையெல்லாம் தான் இந்த தொடர் அட்டகாசமான நகைச்சுவை பாணியில் தருகிறது என்று கூறியிருந்தார். இவரை தொடர்ந்து தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி இதுகுறித்து கூறியது, ஒரு தயாரிப்பாளராக எங்களின் ஆல்டைம் ஹிட்டான ரமணி VS ரமணி தொடரின் புதிய சீசன் உருவாக்குவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி கூறியது:
ஆன்லைனில் இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தான் புதிய சீசன் உருவாக்க தோன்றியது. ஒரு வருடத்திற்கும் மேலாக யோசித்து எங்கள் அன்றாட வாழ்க்கையில் அட்டகாசமான தருணங்களை இந்த தொடரில் கருப்பொருளாக உருவாக்கியுள்ளோம். இன்றைய குடும்பங்களில் தினசரி நடக்கும் பொதுவான விஷயங்களின் அடிப்படையில் இந்த புதிய சீசனை உருவாக்கி உள்ளோம். இது ரசிகர்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பது பார்வையாளர்களை சிரிக்க வைக்கவும் ரசிக்க வைக்கவும் இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும், இந்த தொடருக்காக 80, 90ஸ் கிட்ஸ்களுடன் 2k கிட்ஸ்களும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.