Cow தாத்தா இந்த வீடியோவைப் பாருங்க’ ராமராஜனுக்கு இத்தாலியிலிருந்து பேரன் அனுப்பிய வீடியோ

0
3453
Ramarajan
- Advertisement -

செண்பகமே செண்பகமே என்று சொன்னவுடன் அனைவருக்கும் நினைவிற்கு வருவது நடிகர் ராமராஜன் தான். இவர் தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் இவர் பனியன், அரை ட்ரவுஸரில் நடித்து படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். இந்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும். இவர் 1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இன்னும் கரகாட்டக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. ராமராஜன் அரசியலில் குதித்தார். இவர் இதுவரை ஹீரோவாக மட்டுமே படங்களில் நடித்திருந்தார். மேலும், ராமராஜன் தன்னுடைய அரசியலில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். இடையில் 2012 ஆம் ஆண்டு மேடை என்ற படத்தில் ராமராஜன் நடித்திருந்தார். தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் அவர்கள் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர் சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

ராமராஜன் நடிக்கும் படம்:

இந்த படத்தை ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் முடிவடைந்து 35வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இது குறித்து ராமராஜன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், கரகாட்டக்காரன் படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசி இருந்தார்.

ராமராஜன் அளித்த பேட்டி:

பின் அவர் வெளிநாட்டில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் தமிழ் படங்களின் போஸ்டர்கள் சில இருக்கிறது. அதில் கரகாட்டக்காரன் பட போஸ்டரும் இருந்தது. நான் படங்கள் அதிகமாக நடித்ததில்லை. இப்பதான் 45 ஆவது படம் நடிக்கிறேன். ஆனால், நான் நடித்த படம் கடல் கடந்தும் பேசுகிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இதை என் பேரன் தான் எனக்கு அனுப்பி வைத்தான். என் மகன் அருண் ஸ்காட்லாந்தில் ஆடிட்டராக இருக்கான். உலக அளவில் டீல் பண்ணக்கூடிய ஒரு பெரிய ஆடிட்டராக இருக்கான். அவன் குடும்பத்தோடு டின்னர் சாப்பிட ஒரு முறை இத்தாலியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு போயிருந்தான்.

-விளம்பரம்-

கரகாட்டக்காரன் படம் குறித்து சொன்னது:

அங்கு ஹோட்டலில் தமிழ் பட போஸ்டர்கள் சில இருந்தது. அதில் கரகாட்டக்காரன் படம் போஸ்டரும் இருந்தது. என் மகன் ஆச்சரியமாகி அந்த ஹோட்டல் ஓனர் கிட்ட பேசினான். அவர் தமிழில் பேசி இருக்கிறார். அப்புறம் என் பையன் அவரை பற்றி விசாரித்து இருக்கிறார். அவர் மதுரை மேலூர் சொக்கம்பட்டி என்று சொல்ல என் மகனும் நானும் சொக்கம்பட்டி தான் என்று சொல்லி இருக்கிறார். ஒரே ஊர்காரங்க ரெண்டு பேரும் ஒண்ணா சந்தித்தால் பூரிப்பாகிவிடும். பின் அவர் ராமராஜன் மகனா! நீங்கள் அப்படியே அப்பா மாதிரி இருக்கீங்க என்று அவர் சந்தோஷமாக இத்தாலிக்கு வந்த கதை எல்லாம் சொல்லி இருக்கிறார்.

ராமராஜன் குடும்பம் குறித்து சொன்னது:

அந்த ஓட்டலில் எடுத்த வீடியோவை தான் என் பேரன் எனக்கு அனுப்பி வைத்திருந்தான். பேரன் ஒருமுறை செண்பகமே செண்பகமே பாடலை பார்த்ததிலிருந்து என்னை கௌ தாத்தா என்று தான் செல்லம்மா கூப்பிடுவான். இப்படி நான் சினிமாவில் குறைவான படங்களை நடித்திருந்தாலும் நான் நடித்த படங்கள் வெளிநாடு வரை பேசப்பட்டு இருப்பது சந்தோஷமாக இருக்கு. என்னுடைய வளர்ச்சிக்கு காரணம் பத்திரிக்கை என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

Advertisement