நான் பிச்சை எடுக்கவில்லை ! பீச்சில் பொம்மைகள் விற்கும் ரங்கம்மா பாட்டி நிலை

0
1968
Rangammapaati

தமிழில் அந்த காலத்தில் எம் ஜி ஆர் சிவாஜி போன்றவர்களின் படங்களில் நடித்த கே.ஆர்.ரங்கம்மா பாட்டி பீச்சில் பிச்சை எடுப்பதாக சமீபத்தில் செய்தி ஒன்று பரவியது ஆனால் அது முற்றிலும் பொய் என்று கூறியுள்ளார் ரங்கம்மா பாட்டி.

actress-rangamma-paati

- Advertisement -

தற்போது இருக்கும் காமெடி நடிகர்கள் வெடிவேலு விவேக் போன்றவர்கள் படங்களில் இவர் காமெடி ரோலில் நடித்தது மூலமாக தான் நமக்கு இந்த பாட்டியை தெரியும்.ஆனால் அக்காலத்தில் தேவர் பிலிம்ஸ் தேவர் மூலமாக புரட்சி தலைவர் எம் ஜி ஆரின் விவசாய படத்தில் ஒரு பாடல் மூலமாக அறிமுகம் செய்வபட்டவர்.அதன் பின்னர் எம் ஜி ஆர்,சிவாஜியுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் நடித்த போது எம் ஜி ஆர் சிவாஜி ஆகியோருக்கு செல்ல பிள்ளையாக இருந்திருக்கிறார்.தன்னுடைய சமையல் பிடித்ததால் எம் ஜி ஆர் தன்னை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து சமையல் செய்து தரசொல்வாரம் அப்போதே அதற்காக 10000 ரூபாயை அளித்தாராம் எம் ஜி ஆர் அவர்கள்.தனக்கு 5 பெண் மற்றும் 1 ஆண் குழந்தை இருந்தது அனைவருக்கு திருமணமாகி விட்டது தற்போது 3 பெண்கள் மட்டும் உள்ளனர்.அவர்களுக்காக நான் இரண்டு வீடு வாங்கி கொடுத்தேன் அதனை அவர்கள் இருவரும் விற்றுவிட்டனர்.ஒரு பெண் மட்டும் வாடகை வீட்டில் வசித்துவருகிறார் என்று கூறினார்.

-விளம்பரம்-

kuttima-poster

நான் இப்போதும் கூட படங்களில் நடித்து வருகிறேன் ஆனால் இப்போது உள்ள படங்கள் எல்லாம் எனக்கு பிடிக்க வில்லை என்று சிரித்த படியே கூறினார்.பின்னர் நான் பிச்சை எல்லாம் எடுக்க வில்லை ஷூட்டிங் இல்லாத நேரங்களில் எம் ஜி ஆர் சமாதிக்கு சென்று பொம்மை மற்றும் இதர பொருட்களை விற்று வருவேன் அதில் எனக்கு 300 முதல் 400 ரூபாய் வரை கிடைக்கும் என்று கூறினார்.
பின்பு உங்களுக்கு என்ன தான் ஆசை என்று கேட்டதற்கு எம் ஜி ஆர் ஒரு பாடலில் சொன்னது போல நான் உழைத்து தான் உண்ணுவேன் யாரிடமும் நான் கை எந்தியது இல்லை நான் சாகும்வரை நடிக்க வேண்டும் அது தான் என் ஆசை என்று கம்பிரமாக கூறினார் ரங்கம்மா பாட்டி.

Advertisement