ஒரே நடிகருக்கு தங்கையாகவும், மனைவியாகவும், மகளாகவும் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன்.

0
15545
ramya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். 1983 ஆம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரம்யா கிருஷ்ணன் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

சினிமா துறையில் பெண்களுக்கு என்று விதிக்கப்பட்ட தடைகளை உடைத்தெறிந்து முன்னேறி பல சாதனைகளை படைத்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். இன்று அவர் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களும், பிரபலங்களும் சோசியல் மீடியாவில் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் ரம்யா கிருஷ்ணன் என்றும் இளமையாகவே இருக்கிறார். இவர் இளமைக்கு எடுத்துக்காட்டாக இவர் ஒரே நடிகருடன் தங்கை, மகள், மனைவி போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : ‘ஊர் ஓரம் புளியமரம்’ – டான்ஸ் வீடியோவை பகிர்ந்த லாஸ்லியாவை கலாய்க்கும் நெட்சன்கள்.

- Advertisement -

தற்போது இந்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நாசருடன் இவர் தங்கை, மகள், மனைவி என்ற மூன்று கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார். படையப்பா படத்தில் நாசருக்கு தங்கையாகவும், பாகுபலி படத்தில் நாசருக்கு மனைவியாகவும், வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நாசருக்கு மகளாகவும் நடித்திருப்பார்.

96 liquor bottles seized from Ramya Krishnan's car, driver arrested -  Movies News

இப்படி எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய இளமை தோற்றத்தால் ரசிகர்களை இன்னும் கவர்ந்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். வயதானாலும் இவருடைய அழகும், ஸ்டைலும் மாறவே இல்லை என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் ரம்யா கிருஷ்ணன் என்றென்றும் இளமையாக திகழ்ந்து வருகிறார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement