மலையாள சேச்சியாக மாறிய ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ். வைரலாகும் புகைப்படம்.

0
21317
Ramya-Pandian
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்கள் திடீரென்று பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிங்கர்களுக்கு பரிட்சியமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

-விளம்பரம்-

நடிகை ரம்யா பாண்டியன் திருநெல்வேலியில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் முதன் முதலில் குறும் படங்களில் தான் நடிக்க தொடங்கினார். குறும் படங்களுக்கு பிறகு தான் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவர் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் அவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார்.

இதையும் பாருங்க : தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், ரஜினி 168 படத்தில் இந்த ரோலில் தான் நடிக்கிறாரா ?

- Advertisement -

ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர். அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார். இருப்பினும் அம்மணி, ரசிகர்கள் தன்னை மறக்க முடியாத வண்ணம் கவனமாக இருந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே அடிக்கடி இவர் நடத்தும் போட்டோ ஷூட் தான்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தலையில் கிரீடம் அணிந்து, ஸ்லீவ் லேஸ் ஆடை அணிந்து வித்தியாசமாக கதகளி ஆடுவது போல போஸ் கொடுத்துள்ளார். மேலும், மற்றொரு புகைப்படத்தில் கேரளத்து கலாச்சாரத்திற்கு மாறி, மலையாள சேச்சி போல ஓணம் புடவை அணிந்தும் போஸ் கொடுத்துள்ளார். வழக்கம் போல இந்த புகைப்படமும் சமூக வலைகளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement