கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு பாகுபலி திரைப்படம் நல்ல திருப்புமுனை படமாக அமைந்தது. அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை அடுத்து “ஆரண்யா காண்டம்” இந்த படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கிவரும் “சூப்பர் டீலக்ஸ் ” என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
இதையும் பாருங்க : சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் வரும் வசனம் ஜெமினி கணேசன் படத்தோடதா.! வீடியோவ பாருங்க.!
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு திருநங்கை கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு ஆபாச பட நடிகை கதாபத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது படத்தின் ட்ரைலரிளும் தெளிவாக தெரிந்தது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரம்யா கிருஷ்ணன், நான் பல படங்களில் பல கதாபாத்திரத்தில் நடித்தாலும், ஏற்கனவே நடித்த கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க வேண்டாம் என்று நினைத்து வந்தேன். அதனால், ஏதாவது புதிதாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்பார்த்த நேரத்தில் சூப்பர் டீலக்ஸ் பட வாய்ப்பு வந்தது. இந்த படத்தில் நான் லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதுபோன்ற கதாபத்திரம் மீண்டும் கிடைக்காது. ட்ரைலரை பார்த்து முடிவு செய்ய வேண்டாம் படம் வந்ததும் பாருங்கள் என்று கூறியுள்ளார்.