சீதக்காதி படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிர்னாலினி, பகத் பாசில் போன்ற பலர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ட்ரைலரில் ஒரு நாள்… ஒரு ஆள்… என்று நீண்ட வசனம் ஒன்றை விஜய் சேதுபதி பேசியிருப்பார்.
இதையும் பாருங்க : ஒரு ஆள், ஒரு புலி, ஒரு பாம்பு.! இது சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரின் வடிவேலு வேர்சின்.!
இந்த வசனம் தற்போது இளசுகள் மத்தியில் படு பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த வசனம் ஜெமினி கணேசன் படத்தில் இருந்து காப்பி அடிக்கடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. கடந்த 1969 ஆம் ஆண்டு ஜெமினிகணேசன் நடித்த ‘சாந்தி நிலையம்’ என்ற படத்தில் இந்த வசனம் இடம்பெறுள்ளது.