ஆம், நாங்கள் டேட்டிங் சென்றுள்ளோம்..!திரிஷாவுடனான காதல் முறிவு குறித்து மனம் திறந்த ராணா டகுபதி..!

0
881
thrisha
- Advertisement -

தமிழ், தெலுங்கில் சில வருடங்கள் முன்னர் வரை நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. பல புதுமுகங்களின் வரவால் கடந்த சில வருடங்களாக அவருடைய மார்க்கெட்டும் கொஞ்சம் டல்லடித்தது. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தார்.

-விளம்பரம்-

தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயமும் நடந்து, பின்னர் கருத்து வேறுபாடால் அது திருமணம் வரை செல்லாமல் நின்று விட்டது.முன்னணி நடிகையாக இருந்த போது த்ரிஷாவுக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் இடையில் காதல் என தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மீடியாவிலும் செய்தி வந்தது. ஆனால், வழக்கம் போல இருவரும் நண்பர்கள் என்று சொல்லி வந்தனர்.

இதையும் படியுங்க : நம்புகிறேன்…முதல் சந்திப்பில் காதலை..! நீச்சல் குளத்தில் முத்தம் கொடுத்த த்ரிஷா.!

- Advertisement -

ஆனால், திரைப்பட விழாக்கள், திரையுலக விழாக்கள் என அவர்கள் இருவரும் ஜோடியாக வந்து சென்றனர். த்ரிஷாவின் நிச்சயம் நடந்த பின் அவர்களைப் பற்றிய கிசுகிசுவுக்கும் வேலையில்லாமல் போய்விட்டது. 
திருமணம் நின்ற பின் மீண்டும் ராணா – த்ரிஷா பற்றிய காதல் செய்திகள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தன.

இந்நிலையில் இந்தியில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற ராணாவிடும் திரிஷாவுடனான காதல் குறித்து கேட்கப்பட்டது. முதலில் மழுப்பலான பதிலை சொன்ன ராணா, பின்னர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டும் தான் நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் டேட்டிங் கூட சென்றிருக்கிறோம் ஆனால், சில பல காரணங்களால் எங்களுக்குள் உறவு நீடிக்கவில்லை என்று கூறிவுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement