தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. என்பது காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் ரஜினி நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, ரஜினி அவர்கள் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்.
இவர் வருடம் வருடம் இமய மலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கோவில்கள் பூஜைகளிலும் தவறாமல் ரஜினி பங்கேற்பார். இவர் எப்போதுமே, ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்லணும். ஆண்டவன் சொல்வதை தான் நாம செய்கிறோம். எல்லாமே கடவுள் செயல் என்று சொல்லிக் கொண்டிருப்பார். அந்த வகையில் கடந்த வாரம் நடந்த அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ரஜினிகாந்த் சென்றிருந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது.
ரங்கராஜ் பாண்டே வீடியோ:
இந்த விழாவில் மோடியின் தலைவர்கள், இந்திய சினிமாவின் பிரபல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரும் கலந்துகொண்டு இருந்தார். இந்த நிலையில் ரஜினிக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரு கனெக்சன் குறித்து விமர்சகர், நடிகர் ரங்கராஜ் பாண்டே பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர், திருவண்ணாமலையில் பௌர்ணமியின் போது கிரிவலப்பாதையில் நடப்பதற்கு வெளிச்சம் இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று கலெக்டர் பகவான் யோகி இராமை சந்தித்து கேட்டிருக்கிறார்.
ரஜினி குறித்து சொன்னது:
அதற்கு அவர், நீ ரஜினியை சந்தித்து பேசு. அவர் உதவி செய்வார் என்று சொல்லி இருக்கிறார். உடனே கலெக்டரும் ரஜினியை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது ரஜினி, ஒரு லைட்டுக்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டவுடன் கலெக்டரும் இவ்வளவு தொகை என்று சொல்லி இருக்கிறார். நான் ஒரு லைட் தருகிறேன் என்று சொன்னவுடன் கலெக்டர் வேற எதுவும் பேசாமல் அமைதியாக வந்து விட்டார். மொத்த செலவையும் ரஜினி ஏற்பார் என்று நினைத்தால் அவர் ஒரு லைட் மட்டும் தருகிறார் என்ற கவலையில் கலெக்டர் இருந்தார்.
ரஜினி-கடவுள் உறவு:
பின் 15 நாட்கள் கழித்து ரஜினியின் தரப்பிடம் இருந்து அழைப்பு வந்தது. கலெக்டரும் ரஜினி சந்திக்க சென்றார். அப்போது ரஜினி, கிரிவலத்திற்கு மொத்தமாக லைட் போட எவ்வளவு செலவாகும் என்று கேட்டவுடன் கலெக்டர் ஒரு குறிப்பிட்ட தொகை சொன்னார். மொத்த லைட்க்கு ஆகும் செலவை நானே எடுத்துக் கொள்கிறேன் என்று ரஜினி சொன்னார். இப்படி கலெக்டர் யோகிநாத் ராமிடம் சொன்னது ரஜினிக்கு எப்படி தெரியும். இது சிவனுடைய சித்தம். ஆண்டவன் சொன்னான் அருணாச்சலம் செய்தான் என்று கூறியிருந்தார்.
விஜயசாரதி டீவ்ட்:
இப்படி இவர் பேசியிருந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு தொகுப்பாளர், நடிகர் விஜயசாரதி டீவ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர், நான் படையப்பா படத்தில் ரஜினி சாரோட மருமகன் ரோலில் நடித்திருந்தேன். அப்போது கோவிலுக்கு போவது குறித்து நான் கேட்டதற்கு ரஜினி, நம்ம போனால் நம்மைப் பார்க்க கூட்டம் வந்துவிடும். நாம பெரிய ஆளா தெரிவோம். நாம சாதாரண ஆள், கடவுள்தான் பெரியவர். அதனால் நான் அங்கு போகவில்லை என்று கூறியிருந்தார்.